கழுகு கூட்டை கலைக்கிறது போல As The Eagle Stirreth டுல்ஸா, ஓக்லஹோமா,அமெரிக்கா 60-04-03 1.நாம் ஜெபத்திற்காக சிறிது நேரம் நிற்கட்டும். கடந்த கூட்டங்களில் ...ஏன் என்று சற்றுப்பழகி, ஐக்கியங்கொள்ளத்துவங்கும் போது, வேறெங்கோ செல்வதற்கு நேரம் வந்து விடுகிறது. அது எப்பொழுதும் எனக்கு சிறிதளவு வருத்தத்தை உண்டாக்குகிறது. ஆனால் முன்னோக்கிப் பார்த்தால், ஒருக்கால் நாம் மறுபடியும் இவ்வுலகில் சந்திப்பதற்கு முன்பாக, இயேசுவின் வருகை இருக்குமானால், நாம் ஓரிடத்தில் சந்திப்போம். அங்கு நாம் ஒருவரை விட்டு ஒருவர் எக்காலத்தும் பிரிந்து போகவே மாட்டோம். இப்படி பகல் வேளையில் எத்தனை பேர் தேவனிடம் நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள்? கைகளையுயர்த்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சற்று நேரம் நாம் தலைவணங்குவோம்.  2. சர்வ வல்லமையுள்ள தேவனே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனுக்குக் காரணரே, நன்மையான எல்லா ஈவுகளையும் அளிப்பவரே, உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கும் இந்த ஜெபத்தின் மூலம் உமது இரக்கத்தின் நிழல்களில் வந்து, இந்த மகத்தான டுல்சா கூட்டத்திற்காக எங்கள் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம். இது எங்களுக்கு முக்கியமாக உள்ளது. இந்த அருமையான மக்களை நாங்கள் ஒரு போதும் மறவாதபடிக்கு அவர்கள் எங்கள் இருதயங்களில் இடம் பெற்று விட்டனர். உம்முடைய பரிசுத்த ஆவி அவர்களுக்குள் உள்ளது. இது எத்தகைய ஐக்கியமாக இருந்தது! இது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் மறக்க முடியாத பரலோகத்தின் சிறு அனுபவமாக இருந்தது. 3. பிதாவே, உமது ஆவி இந்த மக்களில் எப்பொழுதும் தங்கியிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இந்த சிறு கூட்டத்தின் சாறு, நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு சபையிலும் எழுப்புதலை உண்டாக்குவதாக. மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்வதாக. கர்த்தாவே , இவைகளை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம்.  4. இப்பிற்பகலில் மேஜையின் மேல் உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பிணியாளிகளுக்கும் அவதியுறு வோருக்கும் அனுப்பப்பட வேண்டிய சிறு துணித் துண்டுகள். சர்வல்லமையுள்ள தேவனே, இவை எந்த பிணியாளிகளைத் தொட்டாலும், அவர்கள் குணமடைய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் உம்மிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். பிதாவே, இது என் ஜெபம் மாத்திரமல்ல, இந்த விஸ்தாரமான அரங்கில் நிறைந்துள்ள கிறிஸ்தவர்கள் அனைவரின் ஜெபமாயும் உள்ளது. நாங்கள் ஒருமனதோடு தேவையுள்ளவர்களுக்காக இதை ஏறெடுக்கிறோம்.  5. கர்த்தாவே, இந்நாளில் நாங்கள் இனி செய்யவிருக்கும் எல்லாவற்றையும் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். இன்றிரவு நடக்கவிருக்கும் சபை ஆராதனைகளுக்காக ஜெபிக்கிறோம். ஒவ்வொரு சபையிலும் மகிமையும் சொல்லி முடியாத சந்தோஷமும் நிறைந்திருப்பதாக. இப்பிற்பகலில் உமது பிரசன்னத்தை அதிகமாக ஊற்றுவீராக. பரிசுத்த ஆவி தாமே வார்த்தைக்குள் வந்து, எங்கள் மாம்சத்திற்குள் நுழைந்து, எங்களுடன் இப்பிற்பகலில் வாசம் பண்ணுவாராக. இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 6. இங்குள்ள ஒவ்வொரு போதகருக்கும் ஊழியக்காரருக்கும், பாதுகாவலருக்கும், வாயிற்காப்போருக்கும், மற்றெல்லாருக்கும், நீங்கள் எங்களுக்கு பாராட்டின தயைக்காக என் சார்பாகவும் என்னுடன் வந்துள்ள சகோ. டேவிட், சகோ. ராய், பில்லிபால், லாய்ஸ், சகோ. ஃபிரட் சாத்மன், சகோ. ஜிம் மக்கையர், சகோ. ஜீன், லீயோ ஆகியோர் கொண்ட குழுவின் சார்பாகவும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இக்கூட்டத்தில் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் உண்மையில் எங்களிடம் அருமையாக நடந்து கொண்டீர்கள். உங்கள் மேல் மிகுந்த மரியாதையும் அன்பையும் எங்கள் இருதயங்களில் கொண்டிருக்கிறோம். அதை ஒருக்காலும் அழிக்க முடியாது. அது அழிக்க முடியாத ஒன்று. நீங்கள் நினைக்கிறதற்கும் கேட்கிறதற்கும் அதிக மாக தேவன் உங்களுக்கு செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் ஐசுவரியத்தின்படியே இதை உங்களுக்குத் தந்தருளுவாராக.  7. சகோ. டாமி ஆஸ்பார்ன்- அவர் இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறார் - தேவனாகிய கர்த்தர் தாமே சகோ. டாமியுடன் இருப்பாராக. சகோ. ஓரல் இப்பிற்பகல் புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது, அவருடைய காலில் தசைமுறிவு ஏற்பட்ட தென்று நினைக்கிறேன். ஆராதனை முடிந்தவுடன் அவருக்காக ஜெபிக்கச் செல்வேன். சகோ. ராபர்ட்ஸின் அலுவலக ஊழியர், சகோ. டாமியின் அலுவலக ஊழியர், மற்றும் எல்லா சபைகள், இவர்கள் அனைவரோடும் கூட தேவன் இருப்பாராக என்பதே என் ஜெபமாயுள்ளது. நீங்கள் எப்பொழுதும் என் இருதயத்தில் இடம் பெற்றிருப்பீர்கள். டுல்சா நீண்ட காலம் நிலைத்திருப்பதாக! தேவனுடைய ஊழியம் நீண்ட காலம் இங்கு தங்கியிருப்பதாக என்பதே என் ஜெபம். 8. நாங்கள் எப்பொழுதாவது மறுபடியும் உங்களிடம் வருவோம் என்று நம்புகிறோம். நான் எப்போழுதும் இவ்விதம் கூறுவதுண்டு; இரவானது மிகவும் இருளானாலோ மழையானது வெள்ளமானாலோ நாங்கள் எந்த விதத்திலாவது உங்களுக்கு வாழ்க்கையை சிறிது அதிக சௌகரியமாகவும் ஆசீர்வாதமாகவும் செய்ய எங்களால் இயன்ற எதையும் நாங்கள் செய்வோம். உங்களுக்கு நாங்கள் உதவியாயிருக்க முடியுமானால், ஜெபர்ஸன்வில்லில் பட்லர் 2-1519 தொலைபேசி எண்ணில் கூப்பிடுகள். அல்லது ஜெபர்ஸன்வில்லுக்கு என்னிடம் தொலை பேசியில் பேசுங்கள். நாங்கள் உங்களுக்கு ஜெப உறுமால்களை அனுப்பி வைப்போம், அல்லது உங்களுக்காக ஜெபிப்போம் - எங்களால் முடிந்த எதையும் செய்வோம். நாங்கள் கர்த்தருக்குள் உங்களுடைய ஊழியக்காரர்.  9. இப்படிப்பட்ட ஒரு ஆராதனையின் முடிவுக்கு வருவ தென்பது ஒருவகையான வருத்தத்தை விளைவிக்கிறது - முக்கியமாக இவ்வளவு அற்புதமான தருணத்தைப் பெற்ற பின்பு. ஆனால் எப்படியும் நாம் பிரிந்து செல்லத்தான் வேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நதிக்கு அப்பால், என்றாகிலும் ஒரு நாள் இவ்வாழ்க்கை முடிவு பெற்றவுடன், நான் அந்த பெரிய மேசையின் ஒரு புறத்திலிருந்து - அது அந்த கல்யாண விருந்தில், ஆகாயத்தில் பரப்பப்பட்ட மேசை - மறுபுறம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வோம். அப்பொழுது நாம் ஓக்லாண்டின் இந்த நேரத்தை நினைவு கூருவோம்.  10. மகிழ்ச்சி பொங்கி, நமது கன்னங்களில் சிறு ஆனந்தக் கண்ணீர் அப்பொழுது வடிந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்பொழுது ராஜா, அழகான வெள்ளையங்கி தரித்தவராய், மிகுந்த அழகுடன் அங்கு வந்து நமது கண்ணீரைத் துடைத்து, "இனி அழாதே. எல்லாம் முடிந்து விட்டது. உலகத் தோற்ற முதல் உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற கர்த்தரின் சந்தோஷத்துக்குள் பிரவேசி'' என்பார். அந்த நேரத்துக்காகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  11. இங்கு கீழே அமர்ந்துள்ள என்னுடன் ஒத்துழைக்கும் போதகர்களை நான் காணும் போது, அவர்களில் பலர் என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள் என்பதை அறிகிறேன். அவர்கள் கிடார் (guitar) இசைக்கருவியுடனும் கஞ்சிராவுடனும் தெருவில் சென்று, கரடு முரடான பாதையில் கற்களை கொட்டி அதை சீர்படுத்தி, தேவன் எனக்களித்துள்ள இந்த ஊழியத்தில் நான் சமமட்டமான பாதையில் சவாரி செய்து செல்வதற்கென வழிவகுத்துக் கொடுத்தவர்கள்.  12. என் விலையேறப்பெற்ற சகோதரரே, நீங்கள் கீழே உட்கார்ந்து கொண்டு, நான் மேலே நின்று கொண்டிருக்கத் தகுதியற்றவன் என்று உணருகிறேன். அது உண்மை . யாருக்காகிலும் கனத்தைச் செலுத்த வேண்டுமானால், அது உங்களுக்கே. தேவன் தாமே உங்களை அதிகமதிகமாய் ஆசீர்வதிப்பாராக. பரிசளிக்கப்படும் அந்நாளில், உங்களுக்கு அவருடைய மகிமையின் கிரீடம் சூடப்படும் போது, நான் அங்கு நின்றுகொண்டு அதைக் காண்பேன் என்று நம்புகிறேன். 13. சிறிது நேரத்துக்கு முன்பு நான் ஒரு போதகருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பெயர் சகோ. நாத்தான் என்பதாக அவர் கூறினார். அவர் யூதர்களின் மத்தியில் ஊழியம் செய்கிறார். அவர், 'சகோ. பிரன்ஹாமே, முதல் நாள் இரவு கூட்டத்தில் நீங்கள் இங்கிருந்தபோது....'' அவரும் வியாதிப்பட்டிருந்த அவருடைய மனைவியும் கூட்டத்துக்கு வந்திருந்தனர் - 'நீங்கள் கூட்டத்தில் என்னைக் கூப்பிட்டு, நான் யாரென்றும், என் மனைவியைக் குறித்தும் அவளுக்கிருந்த வியாதியைக் குறித்தும் கூறினீர்கள். அன்று முதல் அவள் குணமடைந்து வருகிறாள்'' என்றார். அநேக கடிதங்கள், சாட்சிகள்.  14. நீங்கள் இன்னும் உங்கள் உறுமால்களை இங்கு வைக்காமலிருக்கலாம். உங்களுக்கு எந்த விதத்திலாவது நாங்கள் உதவி செய்யக்கூடுமானால், ஒரு சிறு ஜெப உறுமாலை அனுப்ப வேண்டுமானால்... இங்கு ஒரு சிறு விண்ணப்பத்தாள் உள்ளது, எங்களிடம் உள்ள ஜெப்பட்டியல் உலகெங்கும் செல்கிறது. மக்கள் இரவில் எல்லா நேரங்களிலும் உறக்கத்தினின்று எழுந்து, இந்த ஜெபபட்டியலை வைத்து ஜெபிக்கின்றனர். கிழக்கு ஸ்டாண்டர்டு நேரத்தின்படி நாங்கள் காலை 9.00 மணி, 12.00 மணி, 3.00 மணிக்கு ஜெபிக்கிறோம். அவை பழைய யூத ஆகமத்தின்படி பலி செலுத்தும் நேரம். நாங்கள் இந்நேரத்தில் ஜெபிக்கிறோம். ஆனால் உலகெங் கிலுமுள்ள ஜனங்கள் உறக்கத்தினின்று எழுந்து வெவ்வேறு நேரங்களில் ஜெபிக்கின்றனர். இப்படியாக ஒரு பெரிய தொடர் சங்கிலி ஜெபம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கின்றனர் என்று நான் நிச்சய முள்ளவனாயிருக்கிறேன். இந்த சங்கிலி ஜெபத்தின் மூலம் அவர் அநேக அற்புதங்களைச் செய்து வருவதாக எங்களுக்கு தகவல் வருகிறது. நீங்களும் எங்களுடன் சேர்ந்து அந்நேரத்தில் ஜெபிக்க உங்களை ஜெபிக்கிறவர்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறோம்.  15. விரைவில் கர்த்தருக்கு சித்தமானால், நான் மறுபடியும் வெளிநாடு செல்வேன். நாம் சிறிது பணத்தை இங்கு சேமித்திருக் கிறோம் - எனக்கு ஞாபகம் உண்டாவதற்கென, கர்த்தர் இதை கூறும்படி செய்தார். எனக்காக அவர்கள் இருமுறை அன்பின் காணிக்கை எடுத்ததாக கேள்விப்படுகிறேன். அதை நான் எவ்வளவாக பாராட்டுகிறேன் தெரியுமா? அதில் ஒரு காசு கூட என் சொந்த செலவிற்காக உபயோகப்படுத்தப்படாது. அது வெளிநாடு ஊழியத்திற்கென சபையின் தர்ம ஸ்தாபனத்தை சென்றடைகிறது. பாருங்கள்? இந்த பணம் சுவிசேஷத்தை கேட்காதவர்களுக்காக செலவிடப்பட எங்களால் இயன்ற அனைத்தும் செய்வோம். தேவன் தாமே உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக என்பதே என் உத்தமான ஜெபம்.  16. உங்களுக்கு ஜெப உறுமால்கள் தேவைபட்டால், எனக்கு தபால்பெட்டி எண் 325க்கு எழுதவும். அல்லது ஜெபர்ஸன்வில், இந்தியானா என்று எழுதினால் போதுமானது. கடிதம் எனக்கு சேர்ந்து விடும். உறுமாலை வேதாகமத்திற்குள் வைக்க விரும்பினால், அதை அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 17. எத்தனையோ பேர் என்னிடம் கூறியுள்ளனர்.... ஒரு ஸ்திரீ என்னிடம் கூறினாள்.... அவள் மகனின் மேல் மோட்டார் வாகனம் ஒன்று ஏறி, உடைந்த கண்ணாடி அவனுக்கு காய முண்டாக்கி, இரத்தம் பெருக்கெடுத்து உடலிலிருந்து வந்து கொண்டிருந்ததாம். அவள் வேகமாக ஓடி, இந்த உறுமாலை கொண்டு வந்து ( அவள் நகர்புறத்தில் வசிப்பவள்) அந்த பையனின் மேல் வைத்தபோது, இரத்தப்பெருக்கு உடனடியாக நின்று விட்டதாம். இப்படி அநேக சம்பவங்கள். 18. ஜெர்மனி தேசத்திலுள்ள ஒரு ஸ்திரீக்கு திமிர்வாதம் இருந்தது. (நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அது கூறுகிறது. இந்த ஜெப உறுமால்கள் உங்கள் இருதயத்தின் மேல் வைக்கப் படும்போது, அண்மையிலுள்ள உங்கள் கிறிஸ்தவ நண்பர்களைக் கூட்ட வேண்டும்). அது கூறின விதமாகவே அவள் செய்து நிறைவேற்றின பின்பு (அவள் அநேக ஆண்டுகளாக திமிர் வாதத்தினால் அவதியுற்றாள்), அவள், ''சாத்தானே, வேறொன் றுக்கம் உனக்கு இடமில்லை. என்னை விட்டு வெளியே போ'' என்று சொல்லி, நாற்காலியிலிருந்து எழுந்து நடந்தாளாம். அது அவ்வளவு சுலபானது, பாருங்கள். எனவே உங்களுக்கு ஒரு ஜெப உறுமால் வேண்டுமானால், அதற்கு எந்த பணமும் இல்லை, விலையும் இல்லை. எங்களுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். நாங்கள் அதை தபாலில் அனுப்பி வைப்போம். அதை உபயோகிக்க வேண்டிய முறையை அறிவிக்கும் ஒரு தாளை நீங்கள் பெறுவீர்கள். நாங்கள் உங்களுக்கு அனுப்பும் ஜெப ஊறுமால்களின் மேல் நானே ஜெபித்திருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 19. என் குழந்தை, என் மனைவி, அல்லது என் பெற்றோர் வியாதிப்பட்டிருந்து, யாராகிலும் ஒருவருடைய ஜெபத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்குமானால், அவருடைய செயலாளரின் ஜெபத்தை நான் விரும்பமாட்டேன், அவர் ஜெபிப்பதையே நான் விரும்புவேன். ''மற்றவர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்பு கிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்பதே பொன்னான நியதி. எனவே உங்களுக்கு எந்த விதத்திலாகிலும் உதவி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும், தேவன் உங்களை என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக. செய்யப் பட்டவை அனைத்தும் இனிமையாகவும் அழகாகவும் செய்யப்பட்டன, அதை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம்.  20. நான் வெளிநாட்டில் இருக்கும்போது, அது எப்பொழுதும் கடினமாயுள்ளது, ஏனெனில் மந்திரவாதிகள் மற்றும் சூனியக்காரர் தாக்குவதற்குப் பயப்படுவதில்லை. அண்மையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏறக்குறைய பதினைந்து மந்திரவாதிகள் நின்றுகொண்டு, தங்கள் மந்திர சக்திகளை உபயோகித்து புயலை வரவழைத்து, என்னை அடித்துக்கொண்டு போகச் செய்யப் போவதாக கூறினர். நீங்கள் அதை நம்புவ தானாலும் அல்லது இல்லையென்றாலும், அந்தப் புயல் வந்தது. அந்த இடத்தில் 30,000 பேர் குழுமியிருந்தனர். புயல் அவர்களைக் கடினமாக அசைத்தது. கிறிஸ்தவவர்த்தகர் சங்கத்தை சேர்ந்த சகோ. ஆர்கன்பிரைட்- அவரை சகோதரராகிய உங்களுக்குத் தெரியும். அவர் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் பயந்து, "சகோ. பிரன்ஹாமே.....'' என்றார். 21. நான், 'அமெரிக்கையாக உட்கார்ந்திருங்கள். பரிசுத்த ஆவி என்னை இங்கு அனுப்பியுள்ளார்'' என்றேன். ஆகையால்தான் அவர் என்னை அனுப்பாமல் நான் எங்கும் செல்வதில்லை. அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தில் வந்திருக்கிறேன் என்பதை அறிந்திருப்பேன். பாருங்கள்? நான் அவரிடம், 'அவர் என்னை இங்கு அனுப்பினார்'' என்றேன். அவர்கள் ஒரு பெரிய இடத்தை அமைத்திருந்தார்கள். அதன் மேல் கூடாரம் போடப்பட்டிருந்தது. அந்த இடம் மேலும் கீழும் குலுங்கினது. அப்பொழுது பிற்பகல் 2.00 மணியிருக்கும். வானம் தெளிவாக இருந்தது. முப்பது நிமிடங்களுக்குள் புயல் வீசத் தொடங்கினது.  22. நான் பேசுவதை நிறுத்திவிட்டு, "இதை மொழிபெயர்க்க வேண்டாம்'' என்று கூறினேன். பொல்லாத ஆவி இரு பக்கங்களிலிருந்தும் தாக்குவதை உணர்ந்தேன், அந்த மந்திர வாதிகள் அங்கு உட்கார்ந்துகொண்டு, இறகுகளை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு, கழற்றிக்கொண்டிருந்தனர்... ஒரு கத்தரிக் கோலினால் ..... அவர்கள் எப்படி செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான், ''கர்த்தராகிய தேவனே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, என்னை நீரே இங்கு அனுப்பினீர். உமக்கென்று நான் ஏறெடுக்கும் இந்த ஊழியத்துக்கு நீரே பொறுப்பாளி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இப்புயலைக் கடிந்து கொள்கிறேன்'' என்றேன்.  23. அது பின்னால் செல்லத் தொடங்கினது. இடி முழக்கம் நீங்கினது. இரண்டு நிமிடங்களுக்குள் சூரியன் பிரகாசித்தது. ஆயிரக்கணக்கானோர் பீடத்தண்டை ஓடி வந்தனர் - கம்யூனிஸக் கொள்கையை பின்பற்றுபவர், மற்றெல்லாருமே எப்படி .......  24. அந்த சாட்சிகளை நான் எடுத்துக்கூறுவது நன்றாயிருக்காது. ஏனெனில் அது என் கூட்டத்தில் நடந்த ஒன்று. மற்றவர்கள் அதைக் கூறினால் நலமாயிருக்கும். நூலகம்... அது கலைக்கள்ஞ்சியமாகவே (encyclopeadia) இருக்கும் என்று நான் கூற முடியும். என்னுடைய சிறிய ஊழியத்தில் கர்த்தராகிய இயேசு செய்தவைகளை நான் கண்டிருக்கிறேன். நாம் அவைகளைக் குறித்த அநேக புத்தகங்கள் எழுதலாம். அப்படியிருக்க, சகோ. டாமி ஆஸ்பார்ன், சகோ. ஓரல் ராபர்ட்ஸ் ஊழியத்தில் நடந்தவைகளைக் குறித்து எழுதினால் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள் : அது பெரிதாயிருக்கும். நமது கர்த்தர் பெரியவர் - நிச்சயமாக பெரியவர்.  25. இப்பிற்பகலில் சில வேதவசனங்களை வாசிக்க விரும்பு கிறேன். இங்கு சில வசனங்களை குறித்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு ஜெப அட்டை விநியோகித்துள்ளதாக என் மகன் கூறினான் என்று நினைக்கிறேன். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். உங்களை நாம் மறுபடியும் இவ்வாழ்க் கையில் காணாவிட்டால், நாம் கர்த்தருடைய சந்நிதானத்தில் நிற்பதற்கு முன்பு, உங்களை அந்த வாசலில் சந்திப்பேன். ஆகவே, தேவனிடமிருந்து வரும் தரிசனங்கள் உண்மையானவை என்பதை கூற விரும்புகிறேன். அந்த ஒளிமயமான அக்கினி ஸ்தம்பத்தில் உள்ள கர்த்தருடைய தூதன், தேவனே எனக்குதவி செய்யும் - சர்வல்லமையுள்ள தேவன் என் நியாயாதிபதி. அது அங்குள்ளது. அது உண்மையானது. அது உண்மையென்று நீங்கள் அறிந்து கொள்ள இதை கூறுகிறேன். தேவன் சத்தியமானவர். அவர் பொய்யுரைத்து தேவனாயிருக்க முடியாது. அவர் பொய்யராயிருக்க முடியாது, ஏனெனில் அவர் உண்மையுள்ளவராயிருக்க வேண்டும். தவறாக ஏதாவதொன்றிருந்தால், அது சாத்தானே. ஆனால் அந்த ஒளியை நான் கண்டிருக்கிறேன். அது எனக்கு... நான் அவபக்தியாக காணப்பட்டால், என்னை தயவுகூர்ந்து மன்னிக்கவும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், இஸ்ரவேல் புத்திரருடன் சென்ற அதே அக்கினி ஸ்தம்பம் இதுவே. அது இயேசு என்றழைக்கப் பட்ட மனிதனாகிய தேவனுடைய குமாரனுக்குள் வாசம் செய்தது. அவர் வாழ்ந்த அதே வாழ்க்கை இன்று மறுபடியுமாக அதே காரியத்தின் மூலம் தோன்றியுள்ளது.  26. அவர், ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்'' என்றார். அது நம்மெல்லாருக்கும் தெரியும், அவர் பொய்யராயிருக்க முடியாது, அவர், ''நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்'' என்றார். அது தான் அக்கினி ஸ்தம்பம். அது தான் முட்செடியில் தோன்றின தூதன். அது மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணி, திரும்பிச் சென்று இன்று அதே உருவில் உள்ளது. அது உங்களுக்குத் தெரியுமா?  27. நீங்கள், 'இயேசுவா...'' எனலாம். நல்லது, நான் இயேசுவுக்குள் இருந்த தேவனைக் குறிப்பிடுகிறேன். பவுல் தமஸ்குவுக்குப் போய்க் கொண்டிருந்த வழயிலே ஒரு ஒளி அவனைத்தாக்கினது - அக்கினி ஸ்தம்பம், அவனைத் தவிர வேறெவரும் அதைக் காணவில்லை. அவன் மாத்திரமே அதைக் கண்டான். அது மிகவும் பிரகாசமாயிருந்ததால், அவனைக் குருடாக்கினது. அவன், 'ஆண்டவரே, நீர் யார்?'' என்று கேட்டபோது, அவர் "நான் இயேசு'' என்றார். அவர் புறப்பட்டு வந்த தேவனிடத்திற்கு மறுபடியும் சென்றார். என்னைப் பொறுத்தவரையில் அது அவரே, கடைசி நாட்களில் அவர் மறுபடியும் சபையாகிய நம்மில் இருந்து கொண்டு தமது கிரியைகளை முடித்துக் கொண்டிருக்கிறார்.  28. இப்பொழுது நாம், நமது பொருளுக்கு சிறிது பின்னணியாக உபாகமம் 32:11க்குத் திரும்புவோம். நாம் ஜெபவரிசையை அமைத்து, கூடுமானால் ஒரு மணி நேரத்துக்குள் இங்கிருந்து வெளியே செல்வோம் (கூட்டத்திலுள்ள ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசனம் உரைக்கிறாள்-ஆசி).  29. ஓ, பிதாவாகிய தேவனே, எவ்வளவு தாழ்மையாக அதை என் இருதயத்தில் ஏற்றுக் கொள்கிறேன்! என் பாதங்களை வழிநடத்தும் கர்த்தாவே, என் கையை பிடித்துக் கொள்ளும், நான் யாருக்கும் இடறலாயிராமல், வழிப்போக்கருக்கு மேலேறும் கல்லாக இருப்பேனாக. கர்த்தாவே, அதை அருளும். உமது நாமத்துக்கு அல்லது உமது நோக்கத்துக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் என் வாழ்க்கையில் நான் செய்யாதிருப்பேனாக. உமக்கு ஊழியம் செய்ய , என்னால் இயன்ற அனைத்தும் நான் செய்வேன். இதற்காக உமக்கு, உமது குமாரனும் என் ஆண்டவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன். ஆமென். 30. இது எவ்வளவாக என் இருதயத்தை தாழ்த்துகிறது! உபாகமம் 32:11 (மேலும் தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்படுகின்றன - ஆசி). ஆமென். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக (இன்னுமொரு தீர்க்கதரிசனம்- ஆசி). அவருடைய ஆவி நமது மத்தியில் கிரியை செய்து கொண்டிருப்பதற்காக நாம் எவ்வளவாய் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்!  கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறது போல. உபா . 32:11 31. அது ஒரு நீண்ட வேதவாசிப்பு அல்ல. இருப்பினும் அது கர்த்தருடைய வார்த்தை. இதிலிருந்து அடுத்த இருபது அல்லது முப்பது நிமிடங்கள் பேசுவதற்காக தேவன் ஒரு பொருளை நமக்களித்து, அது ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சியை அளித்து, கர்த்தராகிய இயேசுவை சிந்திக்கச் செய்ய இதில் போதுமானது அடங்கியுள்ளது. 32. உங்களுக்கு தெரியுமா, சில சமயங்களில் ..... ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலுள்ள ஒரு வரலாற்றை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படிக்க நேர்ந்தது. ஒரு மனிதன் அரசாங்கத்துக்கு விரோதமாக செய்த குற்றத்துக்காக சிறையிலிருந் தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவன் அருமை கிறிஸ்தவராகிய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனிடம் சென்று, 'திரு. லிங்கன் அவர்களே, நீர் நல்லவரென்றும் கிறிஸ்தவரென்றும் அறிவேன். இந்த மனிதன் இராணுவ சட்டத்தை மீறின காரணத்தால் அரசங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறான். அவன் என்னுடைய நண்பன். அவன் அதை வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் அவன் அதை செய்த குற்றத்துக்கு ஆளாயிருக்கிறான். அவன் வேண்டுமென்று செய்ய வில்லை. நீர் தயவு கூர்ந்து - அவனுடைய உயிரை நீர் ஒருவர் மாத்திரமே காப்பற்ற முடியும். நீர் காப்பாற்ற மாட்டீரா?'' என்று கெஞ்சினான். லிங்கன் இரக்கப்பட்டு தன் எழுதும் இறகை எடுத்து ஒரு காகிதத்துண்டில், ''இந்த மனிதனை நான் மன்னிக்கிறேன்'' என்று எழுதி அதில் ஆபிரகாம் லிங்கன் என்று கையொப்பமிட்டார். (அரசாங்க முத்திரையைக் குத்த அவர் அந்நேரம் தன் அலுவலகத்தில் இருக்கவில்லை).  33. அந்த விலையேறப்பெற்ற மனிதன் தன்னால் இயன்றவரை வேகமாக சிறைக்கு ஓடி, "ஓ, என் நண்பனே, நீ விடுதலையானாய்! நீ விடுதலையானாய்! இதோ இந்தக் காகிதத்துண்டில் ஜனாதிபதியின் கையொப்பம். நீ மன்னிக்கப்பட்டாய்'' என்றான். அந்த மனிதனோ, 'என்னை கேலி செய்யாதே. நான் மரிக்க ஆயத்தமாயிருக்கிறேன், ஏனெனில் எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீயோவென்றால் ஒரு காகிதத்துண்டை கொண்டு வந்து என்னை கேலி செய்ய வந்திருக்கிறாய். இது ஆபிரகாம் லிங்கனின் மன்னிப்பு கடிதமாயிருந்தால், அரசாங்க முத்திரைகளினால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க வேண்டுமே'' என்றான். அவன், “ஐயா, இது ஜனாதிபதியின் கையொப்பம்தான், நீ மன்னிக்கப்பட்டாய்'' என்றான், அவனோ தன் முதுகைத் திருப்பிக் கொண்டு, அதை கேட்க மறுத்தான். அடுத்த நாள் அதிகாலையில் சுட்டுக்கொல்லும் குழவினரால் அவன் சுட்டு கொல்லப்பட்டான். இதோ, அந்த மனிதனைக் கொல்ல வேண்டாம்'' என்று ஜனாதிபதியின் கையொப்பம் கொண்ட கடிதம். அடுத்த நாள் அவன் சுட்டு கொல்லப்பட்டான். அந்த வழக்கு அரசாங்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டடு. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து இவ்விதம் தீர்ப்பு அளித்தது : மன்னிப்பு மன்னிப்பாக ஏற்றுக்கொள்ளப்படா விட்டால், அது மன்னிப்பு ஆகாது 34. தேவனுடைய வார்த்தையும் அவ்வாறேயுள்ளது. அதை சுகமளிக்கும் ஒன்றாக நீங்கள் ஏற்றுக்கொண்டால், அது உங்களுக்கு சுகத்தையளிக்கும். அதை மன்னிப்பாக ஏற்றுக்கொண்டால் அது உங்களுக்கு மன்னிப்பாகும். நீங்கள் இங்கு தேவன் எழுதி வைத்துள்ள விதமாகவே நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால், இங்குள்ள ஒவ்வொரு ஆசீர்வாதமும் உங்களுடையதே. ''கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறது போல" தேவன் தமது பிள்ளைகளை கழுகுகளுக்கு ஒப்பிடுவதை நான் எத்தனையோ முறை சிந்தித்துப் பார்த்ததுண்டு. தேவன் தம்மை கழுகென்று அழைத்துக் கொள்வதை நான் வேதத்தில் காண்கி றேன். அவர் யோகோவா கழுகு. அவர் ஏன் அப்படி செய்கிறார்?  35. நான் இயற்கையில் பிரியம் கொண்டவன். எனவே நான்.... என் முதல் வேதாகமமாக இருந்தது இயற்கையே. இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் கவனித்தால் தேவனைக் கண்டுகொள்ள முடியும். நீங்கள் எங்கு நோக்கினாலும், தேவனை உங்கள் இருதயங்களில் கொண்டவர்களாய் அதை கவனித்தால், நீங்கள் தேவனைக் காண்பீர்கள்.  36. மரித்த பின்பு இவ்வுலகில் வேறு ஜென்மம் எடுத்தல் (reincarnation) என்பதைக் குறித்து அவர்கள் பேசுகின்றனர். அது மூடத்தனம். அது இருக்க முடியாது. ஒரு செடி சாகிறதை நாம் காண்கிறோம். விதை நிலத்தடியில் சென்று அங்கு அழுகிப் போகின்றது; அது மறுபடியும் ஜீவிக்கின்றது - அதன் உயிர்த் தெழுதல். கிறிஸ்தவ மார்க்கம் உயிர்த்தெழுதலை முழுவதும் அடிப்படையாய் கொண்டுள்ளது. அது உண்மையென்று நாம் காணலாம் - மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல். கோடைக்காலம், குளிர்காலம் - இயற்கை அனைத்துமே சரியாக இணைகின்றது.  37. இந்த செடிகள் எப்படி சாகின்றன, அவை எப்படி மறுபடியும் முளைக்கின்றன, காற்று எப்படி அதன் மேல் அடித்து அதை வீழ்த்தி, அது மறுபடியும் ஜீவிக்கின்றது போன்ற இயற்கையில் நடை பெறும் வெவ்வேறு காரியங்களைக் கவனிப்பதே என் முதல் வேதாகமமாக அமைந்திருந்தது. இந்த வெவ்வேறு காரியங்கள், உயிர்த்தெழுதலின் வல்லமை எங்கேயோ இருக்கின்றது என்று நான் அறிந்து கொள்ளும்படி செய்தது.  38. மரத்துக்கு இடைவிடாத (perpetual) ஜீவன் உண்டு . மரம் அதன் முடிவுக்கு வரும்; நாமோ வரமாட்டோம். நமக்கு என்றென்றும் அழியாத ஜீவன் உண்டு. 39. இந்த வசனத்தை படித்தபோது கழுகைக்குறித்து நான் ஆராயத் துவங்கினேன், கழுகு எப்படிப்பட்டது? அது ஒரு வினோதமான பறவை என்று அறிந்து கொண்டேன். இவ்வுல கிலுள்ள மற்றெந்த பறவையைக் காட்டிலும் அது அதிக உயரம் பறக்கக் கூடும். அது விசேஷ அமைப்பைக் கொண்ட பறவை, அது தன் கூட்டை மிக உயரத்தில் கற்பாறைகளில் கட்டுகின்றது. அது மிகவும் வினோதமான ஒரு பறவை. மற்றொரு காரியம், அதன் இறகுகள் மிகவும் இறுக்கமாக அமைந்துள்ளதால், அவைகளை ஒரு இடுக்கியினால் (Plisra) நீங்கள் பிடுங்க முடியாது. அது மிகவும் பிரம்மாண்டமான ஒரு பறவை . அது மிகப்பெரிய பறவைகளில் ஒன்று. அது மிகவும் வினோதமான ஒரு பறைைவ , அது விசேஷித்த வேலை ஒன்றை செய்ய வேண்டும். ஆகையால் அது விசேஷித்த அமைப்பைக் கொண்டதாயுள்ளது. கழுகு என்றால் 'அலகினால் கிழிக்கும் ஒன்று'' என்று பொருள். அது அலகினால் தன் குஞ்சுகளுக்கு ஆகாரம் ஊட்டுகின்றது - தேவனுடைய வார்த்ைைய தேவன் தமது பிள்ளைகளுக்கு வாயிலிருந்து வாய்க்கு ஊட்டு வதற்கு ஒரு அழகான உபமானம். 40. அது தன் கூட்டை உயரத்தில் கட்டுகின்றது. அதை ஒரு நோக்கத்திற்காகவே செய்கின்றது, கழுகுக்கு மிகவும் சக்தி வாய்ந்த செட்டைகள் உண்டு. அது மீட்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது. கழுகு செய்யும் மற்றொரு விசித்திரமான காரியம் என்னவெனில், அது தன் இளமையை புதுப்பித்துக் கொள்கிறது. அது நீண்ட காலம் கழித்து தன்னை சுற்றிக் கொண்டு மறுபடியும் ஒரு இளம் கழுகாக மாறுகின்றது - மறுபடியுமாக அந்த நிலைக்கு தன்னைக் கொண்டு வருகிறது. அது தன் இளமையைப் புதுப்பித்துக் கொள்கிறது. இது சபைக்கு - தேவனுடைய பிள்ளைகளுக்கு - மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது. நாம் சோர்வடைந்து சுவாரஸ்யமில்லாத (stale) நிலையடையும் போது, திடீரென்று பரிசுத்த ஆவியானவர் வந்து நம்மை புதுப்பித்து உற்சாக மூட்டுகின்றார். தேவன் தமது சபையின் அனுபவத்தையும் இளமையும் புதுப்பித்து, அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை அளிக்கிறார். அதற்கு கழுகு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  41. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மாட்டுப்பண்ணையில் அதிகம் குதிரை சவாரி செய்வது வழக்கம். நாங்கள் அப்பொழுது கொலராடோவிலுள்ள ட்ரபுல்சம் ஆற்றண்டை சென்றிருந்தோம். ஹெரிஃபோர்டு ரக மாடுகளின் சங்கம் மலைகளின் மேலுள்ள அரபாஹா புல்வெளியில் அந்த மாடுகளை மேயவிடுகின்றது. நாங்கள் இந்த ரக மாடுகளை மலைகளின் மேல் அந்த இடத்திற்கு கொண்டு செல்வோம். இலையுதிர் காலத்தின் போது அவைகளை ஓட்டி வந்து தேசீய காட்டில் விட்டு, அவைகளுக்கு குளிர்காலத்தில் தீனி கொடுக்க மலையடி வாரத்தில் வைக்கோலை தயார் செய்வோம்.  42. நான் ஒவ்வொரு ஆண்டும் வேட்டைக்காக அங்கு செல்வது வழக்கம். இப்பொழுது அதை செய்து கொண்டிருக்கிறேன். நகரத்திலுள்ள ஜனங்கள் அங்கு சென்று பெண் மான்கள், மான் குட்டிகள், இளம் பசுக்கள், வழிதப்பித் திரிந்த ஆண் கடம்பை மான்கள் போன்றவைகளை கீழ் மட்டத்தில் வேட்டையாடி விட்டு சென்ற பிறகு, நானும் என் நண்பர் ஒருவரும் அங்கு வேட்டைக்குச் செல்வது வழக்கம். நாங்கள் எப்பொழுதுமே எவருக்கும் எட்டாத உயரத்தில் சென்று அங்கு முகாமை அமைப்பதுண்டு. என் நண்பர் கிழக்கு அல்லது மேற்கு பிரிவில் செல்வார். நான் மற்ற பிரிவில் செல்வேன். அநேக நாட்கள் கழித்து நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்போம்.  43. இதை என்னால் மறக்க முடியாது, ஒரு ஆண்டு பனி பெய்யவில்லை. வழக்கமாக பனி பெய்யும் காலம் அக்டோபர் மாதம். அந்த மாதத்தில் மலையின் மேல் பனி பெய்தால், பிற்பகலில் அது மிகவும் அதிகமாக பெய்யக்கூடும். உதாரணமாக ஒரு மணி நேரம் பனி பெய்து கொண்டிருக்கும், பிறகு மழை பெய்து பனியை போக்கி விடும், அதன் பிறகு சூரிய வெளிச்சம் உண்டாகும். இப்படியாக சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டேயிருக்கும். பனி பெய்யும்போது, நாகரீக சத்தத்தை விட்டு நீங்கி உயரே தங்கியுள்ள பெரிய உருவம் படைத்த கடம்பை மான்களையும், மான்களையும் அது பள்ளத்தாக்கிற்கு விரட்டியடித்து விடும். அங்கு தான் நீங்கள் வழக்கமாக உங்கள் வேட்டைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.  44. அந்த ஆண்டு பனி பெய்யத் தொடங்கவில்லை. நான் உயரே சென்றிருந்தேன். என் குதிரையை, அது நடமாடுவதற்கு போதிய இடம் கிடைக்கவும், அது தீனி உண்பதற்காகவும் பல மைல்கள் கீழே கட்டி விட்டு, நான் மரங்களுக்கிடையே கவனித்துக் கொண்டே மேலேறிச் சென்றேன். 45. அன்று பிற்பகல் மலைகளில் புயல் காற்று அடித்து, இடியிடித்து, மின்னல் அடித்தது. புயல் தீரும் வரைக்கும் நான் ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கி கொண்டிருந்தேன். அது மரங்களின் மேல் அடித்து பல மரங்களை சாய்த்தது. புயலடித்து முடியும் வரைக்கும் நான் ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கி, சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் துப்பாக்கியை மரத்தின் மேல் சாய்த்து வைத்திருந்தேன். புயல் அடித்து முடிந்த பின்பு, தேவன் எவ்வளவு அற்புதமானவர் என்று சிந்திந்தேன். புயலடித்து போது, குளிர் காற்று வீசி, பசுமையான இடங்களின் மேலுள்ள தண்ணீரை உரையச் செய்து, அவை பனித்துளிகளாக தொங்கிக் கொண்டிருந்தன. சூரியன் மேற்கில் மேகங்களை விட்டு வெளியே வந்து போது, மலைப் பிளவின் வழியாக அது எட்டிப் பார்ப்பதை நான் கண்டேன். காண்பதற்கு அது தேவனுடைய கண் போல் இருந்தது.  46. உங்களுக்குத் தெரியுமா, தேவன் எல்லாவிடங்களிலும் இருக்கிறார். அவரைக் காண நீங்கள் நோக்கினால், அவரை எங்கு வேண்டுமானாலும் காணலாம். அவர் அங்கிருப்பார். நீங்கள் அவரை நோக்க வேண்டும். அவர் அங்கிருப்பார். அவர் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறார். நீங்கள் சுற்று முற்றும் நோக்கினால், அவரைக் காண்பீர்கள். நான் அங்கு நின்று கொண்டு சூரிய அஸ்தமனத்தை கவனித்தேன். என் கரங்களையுயர்த்தி, ''ஓ, மகத்தான யேகோவா தேவனே, உமது கண்பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது'' என்றேன். அப்பொழுது ஒரு ஆண் கடம்பை மான் இடும் எக்காளம் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அது புயலில் மந்தையை விட்டு சிதறிச் சென்று விட்டது. அது இப்படி நீண்ட சத்தமிட்டது. அந்த சத்தத்துக்கு பதில் வேறொரு இடத்திலிருந்து வருவதை நான் கேட்டேன். 47. மேலே மலையின் ஒரு பக்கத்திலிருந்து சாம்பல் நிற ஓநாய் ஊளையிட்டது. கீழேயிருந்த அதன் துணை அதற்கு பதிலளித்தது. நான் பள்ளத்தாக்கின் வழியாக ஒரு மலையிலிருந்து மற்ற மலையை நோக்கினபோது அங்கு வானவில் காணப்பட்டது. நான் நோக்கின எல்லாவிடங்களிலும் தேவன் இருந்தார்.  48. என் தாய் பாதி சிகப்பு இந்தியர். செரோக்கி இந்தியர் களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அவர்கள் பிறந்தார்கள். அவர்களுடைய தாய் உபகாரச் சம்பளம் பெற்றிருந்தார்கள். நான் மனந்திரும்பின் பிறகும் அந்த சுபாவம் என்னை விட்டுப் போக வில்லை. நான் காடுகளையும் வெளி இடங்களையும் அதிகமாக விரும்புபவன். ஓநாய் ஊளையிட்டு அதன் துணை பதிலளிப்பதை நான் கேட்டபோது, என் கன்னங்களின் வழியாகக் கண்ணீர் வழிந்தது. ஆண் கடம்பை மான் தன் மந்தைக்காக கூச்சலிடுவதை நான் கேட்டேன். அது பதிலளித்தது.  49. நான் வானவில்லைக் கண்டபோது, ''ஆம், தேவன் அங்கும் இருக்கிறார்'' என்றேன். அவர் அல்பா, ஓமெகா. அவர்வர்ணங்கள். வானவில்லிலுள்ள உடன்படிக்கை, அவரைக் காணவேண்டு மென்னும் நோக்கத்துடன் நீங்கள் தேடினால், அவர் எல்லாவிடங் களிலும் இருக்கிறார்.  50. நான் அதிமகிழ்ச்சி கொண்டு என் கரங்களையுயர்த்தினேன். என் கன்னங்களின் வழியாக கண்ணீர் வழிந்தோடியது. அந்த மரத்தைச் சுற்றிச் சற்றி ஓடினேன். எனக்கு மகிழ்ச்சியான தருணம் உண்டாயிருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து முப்பது மைல் தூரம் வரைக்கும் யாருமே இல்லை. நான் மேலும் கீழும் குதித்து உரக்க சத்தமிட்டேன். உண்மையில் அப்பொழுது யாராகிலும் என்னைப் பார்த்திருந்தால், நான் பயித்திக்கார விடுதியிலிருந்து வந்தவன் என்று நினைத்திருப்பார்கள், நான் கவலைப்பட வேயில்லை. நான் நல்ல தருணம் அனுபவித்துக் கொண்டிந்தேன். என் தேவனாகிய கர்த்தரை நான் ஆராதித்துக் கொண்டிருந்தேன். மற்றவர் என்ன நினைத்தாலும், நான் கவலை கொள்ளவில்லை.  51. நான் மரத்தை சுற்றி சுற்றி ஓடி, நல்ல தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் நின்று, ஓநாயின் ஊளையைக் கேட்டு விட்டு, மறுபடியும் மரத்தை சுற்றி சுற்றி ஓடுவதுமாயிருந்தேன்.  52. இப்படி செய்தது ஒன்றை பயமூட்டியது. அங்கு ஒரு சிறு பைன் அணில் (Pine Squirrel) இருந்தது. ஒக்லஹோமாவிலுள்ள உங்களுக்கு அது என்னவென்று தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியவில்லை - அது இவ்வளவு நீளம் இருக்கும், எப்பொழுதும் சத்தமிடும். அது நீலநிற 'கோட்' (coat)டை அணிந்துள்ள காடுகளின் போலீஸ்காரன்..... அது யாருக்கும் கவலைப்படாமல் அதிக சத்தமிடும். அது ஒரு மரக்கட்டையின் மேல் தாவி 'கீச், கீச், கீச்'' என்று தன்னால் இயன்றவரை மிகுந்த சத்தமிடத் தொடங்கினது. நான், நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. நான் என் ஆண்டவரைத் தொழுது கொண்டிருக்கிறேன். உனக்கு அது பிரியமில்லையென்றால், இதைக் கவனி'' என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் மிகவும் வேகமாக மரத்தைச் சுற்றி ஓடினேன். நான், "என் சிருஷ்டிகர்த்தரே, என் தேவனே, இது மிகவும் அற்புதமல்லவா? நான் மறுபடியும் சுற்றி வரப் போகிறேன்'' என்று சொல்லி இப்படியாக சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்த சிறு அணில் தன் சிறு தலையைப் பக்கவாட்டில் திருப்பி புயல் அடித்துக்கொண்டிருந்த இடத்தை நோக்குவதை நான் கவனித்தேன்.  53. நான் அதை பயமூட்டினதாக தெரியவில்லை. வேறொன்று அதை பயமூட்டினது. நான், “நான் பைத்திக்காரத்தனமாக நடந்து கொள்ளவதாக நினைக்க வேண்டாம். நான் அப்படியொன்றும் நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை ஆசீர்வதிக்கிறார் என்று அறிகிறேன், எனவே நீயும் என்னுடன் சேர்ந்து கொள்'' என்றேன். நான் பார்த்தபோது, புயல்காற்று ஒரு பெரிய கழுகை கீழே விரட்டினதை கண்டேன். புயல் அதை கீழே பறந்து வரும்படி செய்திருந்தது... அது கீழே வந்து, ஒருக்கால் தின்று கொண்டிருந்திருக்கும். அதனால் புயலுக்கு மேலே பறந்து செல்ல முடியவில்லை. புயல் அதை புதர்களுக்கு பறந்து வரும்படி செய்தது. அது கீழேயுள்ள புதர்களில் இருந்தது. அதுதான் அந்த அணிலை பயமூட்டியது. 54. அது கழுகை கூர்ந்து கவனித்து, அதை கிழித்தெறிந்து விடுவதுபோல் "கீச், கீச், கீச்'' என்று சத்தமிட்டது. அது எதையும் கிழித்தெறியும் அளவுக்கு பெரிய உருவம் படைத்ததல்ல. அது மரக்கட்டையின் மேல் நின்று தன் வாலை இப்படி சுருட்டிக் கொண்டு “கீச், கீச், கீச், கீச்'' என்று சத்தமிட்டது.  55. நான், ''பயப்படாதே, அது உன்னை ஒன்றும் செய்யாது'' என்று எண்ணினேன். அந்த பெரிய கழுகு ஒரு மரக்கிளையின் மேல் இப்படி தாவினது. நான், 'ஓ தேவனே, நீர் ஓநாயின் ஊளையில் இருக்கிறீர். காட்டு மிருகங்கள் இடும் சத்தத்தில் இருக்கிறீர். நீர் சூரிய அஸ்தமனத்தில் இருக்கிறீர். நீர் வானவில்லில் இருக்கிறீர். இந்த கழுகை எனக்கு முன்பாக ஏன் வரப் பண்ணினீர்? அந்த கழுகு அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? அந்த கழுகில் என்னால் உம்மைக் காண முடியவில்லையே' என்றேன். 56. நான் அந்த கழுகைக் கவனித்தேன் .... அதன் பெரிய சாம்பல் நிறக்கண்களை நோக்கினேன். அது அந்த அணிலின் மேல் அதிக கவனம் செலுத்தவில்லை. அது என்னையே கவனித்துக் கொண்டிருந்தது. அந்த பெரிய கண்கள் என்னையே கவனித்துக் கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது. நான், 'ஆம், அந்த கழுகில் தேவனை நான் காண முடிகிறது. ஏனெனில் அதற்கு பயமேயில்லை. அதற்குள் இருக்கும் ஏதோ ஒன்று அது பயப்படாதிருக்கும்படி செய்கிறது'' என்று எண்ணினேன்  57. நான் ''அது பயப்படுகிறதா என்று பார்க்கலாம்'' என்று நினைத்து, 'ஏய், என்னால் உன்னை சுட்டு கொன்றுவிட முடியும் தெரியுமா? இதோ பார் என் துப்பாகி. நான் நினைத்தால் உன்னை சுட்டு கொன்றுவிட முடியும்'' என்று கூறினேன்.  58. அது என்னை இப்படி முறைத்து பார்த்துவிட்டு, தன் செட்டைகளை விரிப்பதை கவனித்தேன். நான், 'இப்பொழுது எனக்குப் புரிகிறது. அதுதான் காரணம். தேவன் உனக்கு இரண்டு செட்டைகளைக் கொடுத்திருக்கிறார், ஆகையால்தான் உனக்கு பயமில்லை. என் துப்பாக்கியை நான் கையில் எடுப்பதற்கு முன்பே நீ அந்த மரத்துக்கு பறந்து சென்று விடுவாய் என்று உனக்குத் தெரியும்'' என்றேன். 59. நான், ''உன்னை ஆபத்தினின்று காத்துக் கொள்ள தேவன் உனக்களித்துள்ள உன் செட்டைகளின் மேல் நீ அவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பாயானால், தேவனால் அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள சபை இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் எவ்வளவு அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்?'' என்று எண்ணினேன். அது செட்டைகளை விரிப்பதை கவனித்தேன். அது உள்ளதை அது உணர்ந்திருக்கும் வரைக்கும்.....  60. ஒருமுறை ஒருவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நீர் தவறு செய்து விடுவீர் என்னும் பயம் உமக்கில்லையா?'' என்று கேட்டார். இல்லை , ஐயா. அவருடைய பிரசன்னம் என்னைச் சுற்றிலும் இருப்பதை நான் உணரும் வரைக்கும், எனக்கு பயமேயில்லை. அதுதான் எனக்கு வேண்டும். அவர் அங்குள்ள வரைக்கும், அவர்தான் அதை செய்கிறார். 61. நீண்ட நேரமாக நான் கழுகை கவனித்தேன். நான் அதை அதிகமாக நேசிப்பதால், அதற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்பதை அது அறிந்து கொண்டது, எனவே அதற்கு என் மேல் பயமில்லை. ஆனால் அணில் 'கீச், கீச், கீச்'' என்று இடும் சத்தம் அதற்கு பிடிக்கவில்லை. அதை கேட்டு அது அலுத்தப்போனது. எனவே அது ஒரு பெரிய தாவு , தன் செட்டைகளை இரு முறை அடித்தது. அப்பொழுதுதான் அணில் என்னை ஏன் பார்த்து சத்தமிட்டது என்பதை புரிந்து கொண்டேன். 62. அதன் பிறகு கழுகு தன் செட்டைகளை அடித்துக் கொள்ளவேயில்லை. அது தன் செட்டைகளை எப்படி விரித்து வைத்துக் கொள்வது என்பதை அறிந்திருந்தது. ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போதும், அது உயர சென்றது. காற்றடிக்கும், அது உயர செல்லும். அது ஒரு சிறு புள்ளிபோல் காணப்படும் வரைக்கும், நான் அங்கு நின்று கொண்டு அதை கவனித்துக் கொண்டேயிருந்தேன். 63. நான், 'ஓ தேவனே, அது தான்'' என்று எண்ணினேன். அது ''கீச், கீச், கீச்'' என்னும் சத்தம்கேட்டு அலுத்துப்போனது. அது சபைக்கு சபை ஓடி, இதை சேர்வதும் அதை சேர்வதுமாயிருக்க வில்லை - அது பரிசுத்த ஆவியின் வல்லமையில் உங்கள் செட்டைகளை எவ்வாறு விரிப்பது என்பதை அறிந்திருப்பதே. அவர் வரும் போது நீங்கள் உயர உயர பறப்பீர்கள். ''கீச், கீச் - அற்புதங்களின் நாட்கள் கடந்த விட்டன'' ''பரிசுத்த ஆவி என்று ஒன்று கிடையாது.'' ''நீங்கள் இவ்வாறு செய்வதெல்லாம் தவறு'' ''தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையாது'' போன்ற சத்தத்திலிருந்து விலகிச்சென்று, அதற்கும் மேலே பறந்து செல்லுங்கள், பரிசுத்த ஆவி உங்கள் மேல் வர அனுமதித்து, இவைகளை விட்டுப்பறந்து செல்லுங்கள். இவை கேட்கக் கூடாத தூரத்துக்கு உயர பறந்து செல்லுங்கள்.  64. என்னே, தேவன் கழுகை உண்டாக்கினார். அதற்கு செட்டைகள் இல்லாதிருந்தால்..... பருந்து கழுகைப் பின் தொடர்ந்து பறக்க முயன்றால், அது தூள் தூளாகி விடும். காகமும் அதைப் பின்தொடர்ந்து பறக்க முயன்றால், அதன் சிறகுகள் விழுந்து விடும். கழுகு விசேஷமாக உண்டாக்கப்பட்ட பறவை.  65. தேவன் தமது தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். ஒரு தீர்க்கதரிசி உயர பறந்து சென்று, அந்த உயரத்திலிருந்து அவனால் வெகு தூரம் காணமுடிகிறது. ஒரு கழுகை உயர கொண்டு செல்ல அதற்கு பலமுள்ள செட்டைகள் இருந்து, அதற்கொப்பான கண்கள் அதற்கில்லையென்றால், அந்த உயரத்தில் அது செல்லும் போது, பார்வையற்றதாகி விடும். அதன் காரணமாகத் தான், கழுகைப் போலாக முயலும் பருந்து, அவ்வளவு உயர செல்லு மானால், அதனால் காண முடியாது. எனவே அது உயர பறப்பதனால் எந்த பயனும் இல்லை. பாருங்கள், கழுகு விசேஷமாக உண்டாக்கப் பட்ட பறவை. அவ்வாறே கிறிஸ்தவனும் விசேஷமாக உண்டாக்கப்பட்டவனாயிருக்கிறான். அது முற்றிலும் உண்மை. 66. அதெல்லாம் அங்குள்ளது என்று உன்னிடம் கூறும் ஒன்றை நீ பெறாமலிருந்தால், நீ சபைக்குச் செல்வதனால் ஒரு பயனும் இல்லை. பாருங்கள்? அது தேவன் உங்களுக்குச் செய்யும் விசேஷித்த ஒன்று. அந்த கழுகு நீங்கள் காணமுடியாத உயரத்துக்குப் பறந்து, அந்த உயரத்திலிருந்து தரையில் அசையும் மிகச்சிறு பொருளையும் காணமுடிகிறது. அதன் கண்கள் அவ்வளவு பார்வையுள்ளது.  67. சில நாட்களுக்கு முன்பு - மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு - நானும் என் மகளும் சின்சினாட்டியிலுள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்தோம். ஒரு சனிக்கிழமை பிற்பகல் அவர்களை நான் அங்கு அழைத்துச் சென்று அங்கிருந் தவைகளை ஒவ்வொன்றாக் காண்பித்துக் கொண்டு வந்தேன். நானும் சிறுமி சாராளும் அப்பொழுது நடந்து சென்று கொண்டிருந் தோம் ....... சாராள் அப்பொழுது மிகச் சிறியவள், அவளுக்கு அப்பொழுது மூன்று அல்லது நான்கு வயது. நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்து போது, கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு பெரிய கழுகு அங்கிருந்தது.  68. மிருகங்களை கூண்டில் அடைப்பது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை, பாடும் மஞ்சள் பறவை (canary bird) கூண்டில் அடைபட்டுக்கிடப்பதை எனக்குக் காண சகிக்காது. நீங்கள் கூண்டில் கிளிகளை வைத்திருப்பதைக் கண்டனம் செய்கிறேன் என்று எண்ணவேண்டாம். எனக்கு என்னமோ எதையும் கூண்டில் இருப்பதைக் காணப்பிடிக்காது. உங்களுக்கு எந்த சுதந்திரமும் இல்லாத மார்க்கமாகிய கூண்டில் நீங்கள் அடைப்பட்டுக்கிடப்பது எவ்வாறுள்ளதென்று எனக்குத் தெரியும்... நான் சுயாதீனனாயிருக்க விரும்புகிறேன். 69. நீங்கள் பாடும் மஞ்சள் பறவைக்கு நல்ல இறகுகளும் சிறகுகளும் உண்டாக விட்டமின் மாத்திரைகள் அனைத்தும் கொடுத்து அதை கூண்டில் அடைத்து வைப்பது போல், அதனால் அதற்கு அவர்களுக்கு கல்வி கொடுத்து, அதன்பிறகு அவர்களை கூண்டில் அடைத்து, ''அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, அப்படி யொன்றுமில்லை'' என்று கூறுவதனால் என்ன பயன்?  70. சகோதரனே, சுதந்தரமாகப் பறப்பதையே நான் விரும்பு கிறேன் - உங்களுக்கு சுதந்தரத்தையளிக்கும் மார்க்கத்தை.  71. அந்த பெரிய கழுகை நான் கவனித்தேன், அவர்கள் அதை பிடித்து ஒரு கூண்டில் அடைத்திருந்தனர். நான் அதுவரை கண்டதிலேயே மிகவும் வருத்தமான காட்சி அதுவே என்று எண்ணினேன். அந்த பெரிய பறவை தன் பெரிய செட்டைகளுடன் தரையில் படுத்திருந்தது. அதன் தலையையும் கழுத்தையும் சுற்றியிருந்த இறகுகள் உதிர்ந்து விழுந்திருந்தன. அதன் சிறகுகளின் முனையிலிருந்த இறகுகளும் உதிர்ந்திருந்தன. 72. அதை நான் கவனித்தேன். அது கூண்டினுள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அது கூண்டை சுற்றிலும் இப்படி பார்த்துவிட்டு, தன் செட்டைகளை அடித்து, கூண்டின் மேல் தன் தலையையும் செட்டைகளையும் மோதினது. அப்பொழுது இறகுகள் உதிர்ந்து விழுந்தன. அது கீழே விழுந்தது. அது மறுபடியும் எழுந்து பறக்க முயற்சித்து, கீழே விழுந்து, மேலே நோக்கினது. அது தன்னால் இயன்றவரை பறக்க முயற்சித்து, தலையையும் செட்டைகளையும் கூட்டின் மேல் மோதி, கீழே விழுவதும் எழுந்திருப்பது மாயிருந்தது. அது தரையில் படுத்துக்கொண்டு, தன் பெரிய கண்களை உருட்டி, மேலே பார்த்தது.  73. ஓ, ''மனிதன் காணக்கூடியதிலேயே அது மிகவும் வருத்தமான காட்சி'' என்று எண்ணினேன். கழுகு ஆகாயத்தை சேர்ந்த பறவை. அது ஆகாயத்தில் பறப்பதற்கென பிறந்துள்ளது. ஆனால் மனிதனின் தந்திரம், உபாயம் இவைகளின் விளைவாக அது கூண்டில் அடைபட்டுள்ளது .... அது ஒரு ஆகாயப்பறவை. அதற்கு தரையைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அது ஆகாயத்தில் வசிக்க வேண்டும்.  74. அது அங்கு படுத்துக்கொண்டு, அது இருக்கவேண்டிய இடத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தது. அங்கு செல்ல வேண்டுமென்று அதன் இருதயம் வாஞ்சித்தது. ஆனால் அதற்கும் அந்த இடத்துக்குமிடையே கூண்டுக்கம்பிகள் இருந்தன. 75. அது வருத்தம் தரக்கூடிய காட்சி என்று எண்ணினேன். ஆனால் ஒரு சமயம் தேவன் தமது சாயலால் சிருஷ்டித்த மானிட வர்க்கம் ஸ்தாபனங்கள் என்னும் கூண்டுகளில் அடை பட்டிருப் பதைக் கண்டேன். அந்த ஸ்தாபனங்களுக்கு தெய்வீக சுகமளித் தலில் நம்பிக்கையில்லை, சுயாதீனமில்லாத இடங்களில் அவர்கள் அடைபட்டுள்ளனர். தேவனால் அனுப்பப்பட்ட பரலோகத்தின் ஆவி அவர்களுக்குள் உள்ளது. ஆனால் அவர்கள் அடைப் பட்டுக்கிடப்பதால் அவர்களால் வெளியேற முடிவதில்லை.  76. பாருங்கள், ஆண்களும் பெண்களும் அவலட்சணமான ஆடைகளை அணிந்து தெருக்களில் செல்கின்றனர். சுயாதீனமுள்ள தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருக்க வேண்டிய அவர்கள் மது அருந்தும் ஸ்தலத்தில் அடைபட்டு கிடக்கின்றனர். அவர்கள் சுயாதீனமடைய முயன்று எதோ ஒன்றின் மேல் மோதி தங்களை பாழ்க்கடித்துக் கொள்கின்றனர்.  77. ஓ, தேவனே, எனக்கு மாத்திரம் சக்தி இருந்தால் ... அதிகாரம் இருந்தால், நான் கூண்டில் அடைப்பட்டிருந்த அந்த கழுகை விலைக்கு வாங்கி, அது போக விரும்பும் இடத்துக்கு சுயாதீனமாய்ச் செல்ல அனுமதித்திருப்பேன். 78. அதை கூண்டில் அடைப்பது மிகவும் மோசமான செயலே. ஆனால் தேவனுடைய குமாரர்களை கூண்டில் அடைத்து, அவர் களுடைய ஆவிகள் போக விரும்பும் ஸ்தலத்திற்கு சென்று ஏதாவ தொன்றை செய்ய தடை செய்வது அதைக்காட்டிலும் எவ்வளவு மோசமான செயல்? அந்த ஸ்தாபனத்தில் யாரோ ஒருவர், "தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையாது'. பரிசுத்த ஆவியின் வல்லமை என்று ஒன்று கிடையாது'' 'இதைப் போன்ற ஒரு வல்லமை என்பதே இல்லை.'' என்று கூறி அவர்களைக் கூண்டில் அடைத்து விடுகிறார். சகோதரனே, சுதந்திரம் என்று ஒன்றுண்டு என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன். 79. ஒரு சமயம் ஒரு மனிதன் சோளக்கொல்லையில் ஒரு வயதான காகத்தைக் கண்டு அதை கட்டி வைத்தானாம். அவன்....... பறவைகள் மேலே பறந்து, ''ஜானி காகமே, வா! நாம் தென்ப குதிக்குச் செல்வோம், குளிர்காலம் வருகிறது” என்றனவாம். 80. அது மிகவும் பெலவீனமடைந்து அதனால் நடக்கவும் கூட முடியவில்லை. நல்லவர் ஒருவர் ஒரு நாள் அதன் வழியாக வந்து அந்த காகத்தைக் கண்டு, ''பாவம் காகம், அதனை அவிழ்த்து விடுகிறேன்'' என்று சொல்லி அவிழ்த்து விட்டாராம். அப்பொழுது மற்ற காகங்கள், 'ஜானி காகமே, வா, நாம் தென் பகுதிக்குச் செல்வோம்'' என்றனவாம். ஆனால் அது நீண்ட காலம் கட்டப்பட்டிருந்ததால், அது சுற்றி நடந்து வந்து, ''என்னால் முடியவில்லை, என்னால் முடியவில்லை'' என்றதாம். அது விடுதலை யானதை அதனால் அறிந்துகொள்ள இயலவில்லை.  81. இன்று மனிதனும் அவ்வாறே இருக்கிறான். சகோதரனே, இயேசுகிறிஸ்து உன்னை விடுதலையாக்கினார் என்று நீ அறியாம லிருக்கிறாய். சகோதரனே, அதை விட்டு நாம் வெளியே வருவோம் நாம் வேறெங்காவது செல்வோம்! தேவன் நம்மை விடுதலை யாக்கியிருக்கிறார். நீங்கள் பட்டினி கிடந்து மரிக்க வேண்டாம். தேவன் தமது பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களையும், நாம் இன்னும் பெறாத அநேக நன்மைகளையும் வானங்கள் முழுவதிலும் வைத்துள்ளார். அங்கு நாம் செல்வோம்! ''விருப்ப மானவன் வரக்கடவன். ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாய் பருகுங்கள்.'' 82. கழுகு தன் கூட்டை உயரத்தில் கற்பாறைகளில் கட்டுகிறது. அது ஒரு... அது சபைக்கு ஒப்பானது. இயேசு கிறிஸ்துவின் சபை மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்காக ஒளியைத் தருகிறது. அது உயரமாயுள்ளது. அதற்கு உயர்ந்த விருப்பம் உள்ளது. அதற்கு உயர்ந்த எதிர்பார்த்தல் இருக்க வேண்டும். ஏனெனில் தேவன் ஒன்றைச் செய்ய நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 83. இன்று பிற்பகல் நீங்கள் இங்கு வந்து, “சரி, நான் போவேன், நான் ஜெபவரிசைக்குச் சென்றால் நலம்''; ''நான் சுகமாகி விட்டேன் என்று அவர் கூறினால், கர்த்தர் ஒன்றை அறிவிப் பாரானால்...'' என்பது போன்ற எதிர்பார்த்தலைப் பெற்றிருக்க வேண்டாம். ''அவர் எனக்கு செய்யவில்லையென்றால், எனக்கு ஒன்றும் கிடைக்காது.''  84. உங்கள் எதிர்பார்த்தல் ஒன்றும் அதிகம் அல்ல. இன்று பிற்பகல் சபைக்கு வாருங்கள். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், ''நான் சுகமடைந்து வீடு திரும்புவேனென்று எதிர்பார்க்கிறேன்! அது நடக்கும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்'' என்று சொல்லுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், ''நான் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும். இல்லையென்றால் இந்த இடத்திலேயே நான் தங்கி அழுகிப்போய் விடுவேன். பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள மக்களிடையே நான் வந்திருக்கிறேன். ஆவி உள்ள இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதைப் பெறும் வரைக்கும் நான் இங்கேயே தங்கியிருப்பேன்'' என்று கூறுங்கள்.  85. பட்டி ராபின்சனைப் (Buddy Robinson) போல் இருங்கள். அவர் சோளக்கொல்லைக்குச் சென்று, ''கர்த்தாவே, நீர் பரிசுத்த ஆவியை எனக்குத் தராமல் போனால், நீர் பூமிக்குத் திரும்பிவரும் போது, பட்டி ராபின்சனின் எலும்புக் குவியில் இங்கு கிடக்கக் காண்பீர்'' என்றாராம். அப்படித்தான் செய்ய வேண்டும். முற்றிலுமாக! நாம் அதை ஏனோதானோவென்று எடுத்துக் கொள்கிறோம்.  86. ஒரு முறை ஒரு மனிதன் தேவனைத் தேடிக் கொண்டிருந்தான். ''நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்'' என்று அவன் கூறின ஒவ்வொரு முறையும் பிசாசு , "இல்லை, நீ இரட்சிக்கப் படவில்லை'' என்பானாம். ஒரு நாள் அவன் ஒரு முளையை தரையில் அடித்து. ''சாத்தானே, இன்று முதல் இந்த முளையை நான் சுட்டிக் காண்பிப் பேன். இந்த இடத்தில் தான், நான் இரட்சிக்கப்பட தேவனுக்குத் தேவையாயிருந்தவைகளை நான் சந்தித்தேன்'' என்றானாம். 87. இன்று பிற்பகல் நீங்கள் அமர்ந்துள்ள இருக்கைகளின் பக்கத்தில் உங்கள் முளைகளை அடித்து, 'சாத்தானே, இங்கு தான் என் சந்தேகம் அனைத்தும் படுத்திருக்கும். நான் அவருடன் இன்று பிற்பகல் பறந்து செல்லப்போகிறேன். நான் என்ன செய்யமுடியும் என்று அவர் கூறியுள்ளதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறேன்'' என்று கூறுங்கள் - நீங்கள் அதை விசுவாசிப்பீர் களானால்.  88. இந்த கழுகு கூட்டைக் கட்ட ஆயத்தமாகும் போது, உயரே கற்பாறைகளுக்கு சென்று, அந்த உயரத்தில் தன் கூட்டைக் கட்டுகிறது. ஏனெனில் அதற்கு... அது தன் குஞ்சுகளைப் பாதுகாக்க விரும்புகிறது.  89. தேவனும் அப்படித்தான் செய்கிறார். அவர் தமது சபையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியிருக்கிறார். நீங்கள் மாத்திரம் அவரை அனுமதித்தால், பூமியின் பருந்துகளுக்கு விலக்கான ஒரு உயர்ந்த இடத்தில் உங்களைக் கொண்டு போய்வைப்பார். அவர் நிச்சயம் செய்வார். 90. கழுகு கோழியைக் காட்டிலும் எவ்வளவு வித்தியாசமானது! கோழியும் ஒரு பறவையே. அது தன் கூட்டை பூமியில் களஞ்சிய முற்றத்தில் கட்டுகிறது. அங்கு பாம்புகளும் மற்ற விஷ ஜந்துக்களும் அதன் குஞ்சுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். அதற்கு ஆகாயத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது, இருப்பினும் அது ஒரு பறவை; அது ஒருக்கால் ஸ்தாபனத்திலுள்ள சகோதரன். அவன் தரையில் இருக்கிறான். அவனுக்கு அழகான நீல வானத்தில் உயர பறப்பதைக் குறித்து ஒன்றும் தெரியாது.  91. தாய் கழுகுகள் கூட்டைக் கட்டும் போது ..... அது பெரிய குச்சிகளைக் கொண்டு வந்து கற்பாறைகளின் பிளவில் வைத்து, தன் பெரிய அலகினால் அவைகளை இழுத்து, அவைகளை கடினமான வேர் கொடிகளினால் ஒன்றாக கட்டுவதை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். கூட்டின் உட்புறம் கடினமான வேர்களைக் கொண்டது .... ஒரு வகை குச்சிகளை அது ஒன்றாக சேர்க்கின்றது. ஆனால் புயல் அடித்துக் கொண்டு போய் விடாதபடி அந்த கூட்டை பலமாகக் கட்டுகிறது.  92. நான் மகிழ்கிறேன். ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' எப்படிப்பட்ட கல்? ஆவிக்குரிய வெளிப்பாடு. ''மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?'' “சிலர் எலியா என்றும், சிலர் மோசே என்றும் சொல்லுகிறார்கள்'' ''ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?'' பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்றான்.  93. 'யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. இதை நீ வேதாகமக் கல்லூரியில் கற்கவில்லை. வேறுயாரும் இதை உன்னிடம் கூறினதால், நீ கற்றுக் கொள்ளவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. வாழ்க்கையின் புயல்கள் அதை ஒரு போதும் அசைப்பதில்லை.''  94. ஆகையால் தான் அவர் தம்மை கழுகு என்று அழைத்துக் கொள்கிறார். அவர் கூட்டைக் கட்டினார். தாய் கழுகு, தன் குஞ்சுகள் பிறப்பதற்காக ஆயத்தப்படுத்தி தன்னால் இயன்ற எல்லா வற்றையும் கொண்டு வருகிறது. அது மிருதுவான இலைகளை தன் அலகில் பிடித்துக் கொண்டு வந்து, குஞ்சுகளைக் குச்சிகள் குத்தாமாலிருக்க அவைகளை மூலையில் வைக்கின்றது. பிறகு அது சென்று ஒரு ஆட்டுக்குட்டி அல்லது ஒரு முயலைக் கொன்று வந்து, அந்த கூட்டினுள் வைத்து அதை மிருதுவாக்குகிறது. ஓ, வரப்போகும் தன் குஞ்சுகளுக்காக அது கூட்டை அலங்கரித்து அழகாக்குகிறது.  95. அப்படித்தான் யேகோவோ கழுகும் செய்கிறார். அவர் அந்த கூட்டை உண்டாக்குகிறார். ஓ, என்னே, குழந்தை தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கும் போது, அதனால் நடக்க முடியுமென்று அது எண்ணுகிறது, அது அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓடி மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கிறது. அது மிருதுவாக்கப்பட்ட கூட்டில் உள்ளது. எனவே அது விழுந்தாலும் வலி இருக்காது. அப்படித்தான் யேகோவா தாய்க் கழுகும் செய்கிறார். அவர் பிறக்கப்போகும் தமது குழந்தைகளுக்கென தமது கூட்டை மிருதுவாகவும் அழகாகவும் செய்கிறார். 96. சிறிது கழிந்து முட்டைகள் வருகின்றன, அதிலிருந்து குஞ்சுகள் தோன்றுகின்றன. தாய் கழுகு தந்தை கழுகுடன் சென்று, இரை கொண்டு வந்து, குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரைக்கும், அவையிரண்டும் அவைகளுக்கு இரை ஊட்டுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்த பிறகு, இந்த குஞ்சுகள் கோழிக் குஞ்சுகளைப் போல் இருக்கக்கூடாது என்பதை தாய் கழுகு உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். அது உண்மை . அவை பூமிக்குரியவைகளாக இருக்க அது விரும்பவில்லை. அவை கழுகுகள். அவை கழுகுகள் என்று தாய் கழுகு அறிந்துள்ளது.  97. யேகோவா கழுகும் அதை தான் செய்கிறார். நாம் களஞ்சிய முற்றத்தின் கோழிக் குஞ்சுகளாக இருக்க அவர் விரும்பவில்லை. நாம் கழுகுகளாக நீலவானத்தில் பறப்பதையே அவர் விரும்புகிறார். நம்முடைய சுபாவமே நாம் சுதந்திரமாக மேலே பறக்க வேண்டும் என்பதே. ''குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்'' நீங்கள் உயர இருக்க வேண்டு மென்று அவர் விரும்புகிறார். 98. எனவே சில நாட்கள்..... அவைகளை நான் எத்தனையோ முறை கவனித்திருக்கிறேன். கூட்டைக் கலைக்கும் நேரம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தாய் கழுகு அந்த கூட்டின் பக்கத்தில் நிற்கும், நான் எத்தனையோ நாட்கள் சூரிய வெப்பத்தில் படுத்துக் கொண்டு, இதைக் கண்டு குழந்தையைப் போல் கண்ணீர் வடித்திருக்கிறேன். பாருங்கள், அந்த பெரிய தாய் கழுகு - அவை மிகப்பெரியவை. தாய் கழுகு தந்தை கழுகைக் காட்டிலும் பெரிய உருவம் படைத்தது. சில கழுகுகள் செட்டைகளை விரித்தால், ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் பதினான்கு அடி நீளம் இருக்கும். 99. தாய் கழுகு கூட்டின் பக்கத்தை அடைந்து, கூட்டை சுற்றி உய்யாரமாக இப்படி நடந்து வரும். அது குஞ்சுகளிடம் சென்று தன் விசாலமான செட்டைகளை விரித்து கூச்சலிடும். அந்த சத்தத்தைக் கேட்டு சில சமயங்களில் கழுகுக் குஞ்சுகள் குப்புறவிழும். அவை விழவேண்டுமென்றே அப்படி செய்கிறது. அதைத்தான் அவைகள் செய்ய வேண்டுமென்று அது விரும்புகிறது. பிறகு அவை எழுந்திருக்கும். அது மறுபடியும் கூச்சலிடும். ஏன்? அது தன் சத்தத்திற்கு அவைகளைப் பழக்குகிறது.  100. ''என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது' சத்தமிடும் நேரம் வரும்போது, அது என்னவென்று குஞ்சுகள் அறிந்து கொள்ள வேண்டுமென்று அது விரும்புகிறது. அது சத்தமிடுகிறது. ஓ, என்னே! "என் சத்தத்தின் ஒவ்வொரு இராகத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் அநேக தோட்டிகள் உள்ளன. நீங்கள் கழுகுகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கழுகின் சத்தத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'' என்று அது கூறுகிறது. ஆமென்! அல்லேலூயா! 'கழுகின் சத்தத்ததை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.'' பிறகு அது தன் விசாலமான செட்டைகளை விரித்து குஞ்சுகளை நோக்கி, ''பாருங்கள், உங்களை முதன் முறையாக என் செட்டைகளின் மேல் அமர்த்தி பறக்கப் போகின்றேன். முதலாவதாக, நான் எவ்வளவு பெரியவள் என்று பாருங்கள்'' என்கிறது. 101. ஓ, அது எவ்வளவு இனிமையானது! ஒருக்கால் சில நேரங்களில் வியாதி நம்மை வீழ்த்தியிருக்கக்கூடும் - அல்லது வேறெதாகிலும் - அப்பொழுதெல்லாம் நாம் மேல் நோக்கி, யேகோவாவின் இரு பெரிய செட்டைகளான பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் எடுத்துக்கொண்டு, 'நீர் எவ்வளவு பெரியவர் கர்த்தாவே, நீர் எவ்வளவு பெரியவர்!'' என்று கூறுவோம். 102. ஓ, அது தன்னை அவைகளுக்கு காண்பிக்க விரும்புகிறது. “பாருங்கள், நான் எவ்வளவு பலசாலி” என்று சத்தமிட்டு, “இது என் சத்தம்'' என்கிறது. அப்படியிருக்க, கழுகு ஒவ்வொரு முறையும் அதே சத்தம் இடுவதில்லை என்று ஒரு போதகர் எப்படி கூறமுடியும்? ஒவ்வொரு முறையும் அது அதே சத்தம் இடுகிறது. நிச்சயமாக. ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''.  103. பழைய ஏற்பாட்டில் கர்த்தர், "நான் யேகோவா. நான் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தேன். நான் எபிரேய பிள்ளைகளை எரிகிற அக்கினிச் சூளையிலிருந்து வெளியே கொண்ட வந்தேன்'' என்று கூறியுள்ளார். அல்லேலூயா! "தேவனுடைய குமாரனை உயிரோடெழுப்பினது நானே. பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை அனுப்பினது நானே .''  104. அவருடைய மகத்தான செட்டைகளை நோக்கி, இவைகளைக் காண உங்களுக்குப் பிரியம் அல்லவா? அது உங்களைப் பரவசப்படுத்துகிறது அல்லவா? இந்த கழுகு குஞ்சுகள், ''ஓ, அம்மா, உங்களை நிச்சயம் நம்புகிறோம். நீங்கள் பெலசாலி, பெரியவர்கள்'' என்கின்றன.  105. யாராகிலும் சூரியனையும் அதைச் சுற்றி வரும் கிரகங்களையும் (solar system) காணும் போது, என்ன தோன்றுகிறது? சில நாட்களுக்கு முன்பு நான் மவுண்ட் பாலமார் என்னும் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு தொலைநோக்கியின் வழியாக பன்னிரண்டு கோடிலைட் இயர் (light year) தொலைவிலுள்ள விண்வெளியைக் காண முடிந்தது. ('லைட் இயர்' என்பது ஒளி ஒரு வினாடிக்கு 186,000 மைல் வேகத்தில் ஒரு ஆண்டில் செல்லக்கூடிய தூரம். விண்வெளி கிரகங்களின் தூரம் இப்படித்தான் கணக்கிடப்படுகிறது - தமிழாக்கியோன்). அது எத்தனை மைல்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள், அதாவது, ஒளி எவ்வளவு வேகமாக பிரயாணம் செய்கிறது என்று. பன்னிரண்டு கோடி லைட் இயர் தூரத்திலுள்ள விண்வெளி. அதற்கும் அப்பால் வேறு சந்திரனும் நடசத்திரங்களும் உலகங்களும் உள்ளன. நீர் எவ்வளவு பெரியவர்! நீர் எவ்வளவு மகத்துவமானவர்!  106. இந்த சிறு கழுகு குஞ்சுகள் சுற்றுமுற்றும் பார்த்து, ''நீர் எவ்வளவு பெரியவர்!'' என்கின்றன. இங்கு ஒரு பூ இருக்கின்றது. அது செத்து நிலத்தடியில் செல்கின்றது. ஆனால் அது மறுபடியும் தோன்றுகிறது. நீர் எவ்வளவு பெரியவர்! இங்கு புற்றுநோயால் அரிக்கப்பட்ட எளியவர் ஒருவர் இருக்கிறார். அவர் காண்பதற்கு நிழலைப்போல் இருக்கிறார். அவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றது. அடுத்த முறை நீங்கள் காணும்போது, அவர் திடகாத்திரமுள்ளவராய், இரத்த ஓட்டத்தால் சிவந்த முகம் கொண்டவராய் இருக்கிறார். நீர் எவ்வளவு பெரியவர்! நீர் எவ்வளவு மகத்துவமானவர்!  107. தெருவில் நடத்தை கெட்ட ஒரு பெண்ணைக் காண்கிறீர்கள். நாய்களும் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க தகுதியற்றவள். ஆனால் ஒரு சமயம் தேவனுடைய வல்லமை அவளுடைய கவனத்தைக் கவர்கிறது. அவள், ''நீர் எவ்வளவு பெரியவர்!'' என்று ஆர்ப்பரிக்கிறாள். அவள் பாரமான யாவற்றையும் தன்னைச் சற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் எளிதில் தள்ளி விடுகிறாள். முதலாவதாக என்ன தெரியுமா, அவள் பரிசுத்தவாட்டியாக காணப்பட்டு சுவிசேஷப் பிரதிகளை தன் அக்களத்தில் வைத்து வெளியே சென்று இப்படி ஏதாவ தொன்றைச் செய்றாள்.  108. தெரு முனையில் மது விற்கும் அந்த மோசமான மனிதன் ஒரு சமயம் மேலே நோக்கி, ''நீர் எவ்வளவு பெரியவர்!'' என்று கூறட்டும்! அவன் மது விற்பதையும், குடிப்பதையும், சிகரெட்டு கள் சுருட்டுகள் பிடிப்பதையும் பொய் சொல்வதையும் விட்டு விலகி வேதாகமத்தைக் கையில் கொண்டவனாய் தெருவில் தேவனுடைய மகிமையைக் குறித்து சாட்சி கொடுப்பதை நீங்கள் காண்பீர்கள். 'நீர் எவ்வளவு பெரியவர்!'' 109. தேவன் ஒரு சமயம் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் உங்களிடம் விரிக்கட்டும், அதன் பக்கங்களைப் படித்து அது என்னவென்று காணுங்கள். அப்பொழுது அங்கிருந்து, "நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர்களுக்கு என்ன செய்தேனோ அதை உனக்கும் செய்வேன். நான் மாறாதவர். நான் யோகோவா, நான் மாறாதவர்'' என்னும் ஒரு சத்தம் உண்டாவதைக் கேட்பீர்கள். இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன், ஓ, என்னே! அது உண்மையென்று எவ்வளவு நன்றாக அறிந்திருக் கிறேன்!  110. அந்த கழுகு குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளைப்போல் இருக்கக் கூடாது என்று தாய் கழுகு தீர்மானம் செய்துவிட்டது. அவைகள் அவ்விதம் இருக்கக்கூடாது என்று அது தீர்மானித்துவிட்டது. அதன் பிறகு அது என்ன செய்கிறது தெரியுமா? அது கூட்டைச் சுற்றி ஒய்யாரமாக நடந்து தன் செட்டைகளை விரித்து, "தேனே, நான் எவ்வளவு பெரியவள் என்று பார். நீ என்னை நம்ப வேண்டும். நான் உன்னை ஓரிடத்துக்கு கொண்டு செல்லப் போகிறேன். அங்கு நீ என்னை நம்ப வேண்டும்'' என்கின்றது.  111. இன்று பிற்பகல் இந்த வியாதியஸ்தர்களை தேவன் அதே நிலையில் அனுப்பியுள்ளாரா என்று எனக்கு எப்படித் தெரியும்? மருத்துவர் உங்களைக் கைவிட்ட நிலையில் அவர் உங்களை வைத்திருக்கக் கூடும். நீங்கள், 'சகோ. பிரன்ஹாமே, நான் ஒரு கிறிஸ்தவன்'' என்கிறீர்கள். அது எனக்குத் தெரியும். "நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன், இருப்பினும் நான் அவதிப் படுகிறேன்'' 112. அவருடைய செட்டைகளை நீ பார்த்து, அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று யேகோவா முயற்சி செய்கிறாரா இல்லையாவென்று உனக்கு எப்படித்தெரியும்? ''நான் எவ்வளவு பெரியவர் என்று பார். நான் உனக்கு ஒன்றைச் செய்யப் போகின்றேன். அப்பொழுது என்னை விசுவாசிப்பாய்.'' பார்த்தீர்களா? "நீ எதன் மேல் முதலாவதாக நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்பதை அறிய விரும்புகிறேன். என் பெரிய செட்டைகளைப் பார்த்தாயா?''  113. சில நாட்கள் கழித்து தாய் கழுகு என்ன செய்கிறது தெரியுமா? படுக்கை மிருதுவாக்கப்பட்டுள்ள வரைக்கும் அந்த கழுகு குஞ்சுகளுக்கு கூட்டை விட்டு வெளியே வரமனதில்லை. அது உண்மை. தாய் கழுகு என்ன செய்கிறது தெரியுமா? அது கூட்டுக்குள் சென்று தன் அலகினால் மிருதுவான உரோமத்தை சுக்குநூறாக கிழித்து அதை தூர எறிந்து விடுகிறது. உலகத்தின் பழக்கத்திலே அவர்கள் இருந்துவிடச் கூடாதென்ற அது தீர்மானம் செய்கிறது. அது உண்மை .  114. தேவன் சில நேரங்களில் அப்படித்தான் செய்கிறார். ஓ, நீங்கள் பெரிதான எல்லாவற்றையும் சிந்தனை செய்து பெருமையடித்துக் கொள்கிறீர்கள்... அதை எதிர்நோக்கியிருக்க வேண்டாம். அப்படியானால், நீங்கள் பெந்தெகொஸ்தேயிலிருந்து கோடிக் கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறீர்கள். பெந்தெகொஸ்தே மக்கள் எளிதான காரியங்களை எதிர்நோக்கி யிருக்க வில்லை. அவர்கள் தங்களுக்கிருந்த எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்து, கிறிஸ்துவுடன் தனியே சென்றனர். ஆனால் இன்றோ நாம் ஆவிக்குரியவர்களாக இருக்க வேண்டு மானால், நிறைய விலையுயர்ந்த காடிலாக் கார்களை சொந்தமாகப் பெற்றிருக்கிவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. என்ன நேர்ந்தது? எங்கோ எதோ தவறுள்ளது. -  115. நான்... நிந்தைப்படும் தேவ மைந்தர்களின் வழியில் நான் செல்லட்டும். நான் இயேசுவுடன் தொடங்கினேன். கர்த்தாவே, என்னை எந்த சூழ்நிலையின் வழியாகவும் கொண்டு செல்லும். மக்கள் மறுபிறப்பைக் குறித்து அஞ்சுகின்றனர். அதுதான் விஷயம். அவர்கள் மறுபடியும் பிறக்க அஞ்சுகின்றனர். 116. எந்த ஒரு பிறப்பும் - அது எங்கு நடந்தாலும் - குழப்பமே (mess). அது பன்றி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் நடந்தாலும், வைக்கோல் போரில் நடந்தாலும், அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனையில் நடந்தாலும், அது குழப்பான நிலையே, ஜனங்கள் அந்த குழப்பமான நிலையை அடைய விரும்புவதில்லை. என் மட்டத்தில் நான் தேவனைச் சந்திக்க விரும்பவில்லை. தேவனின் மட்டத்தில் (level) நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். அதற்காக நான் அழவேண்டுமென்றாலும், பிரசவ வேதனைப் படுவோர் வலியின் மிகுதியால் இடும் கூச்சலைப்போல் கூச்சலிட நேரிட்டாலும், அந்நிய பாஷைகள் பேச வேண்டுமென்றாலும், நான் என்ன செய்ய வேண்டுமென்றாலும் எனக்கு கவலையில்லை, எத்தனை அண்டைவீட்டார் என்னைச் குறித்து ஏளனமாக பேசினாலும் எனக்குச் கவலையில்லை, நான் மறுபடியும் பிறக்கட்டும். நான் எந்நிலையில் இருக்க நேரிட்டாலும் எனக்குக் கவலையில்லை. 117. என் நன்மதிப்பை நான் கெடுத்துக்கொள்ள நேரிட்டாலும்.... எனக்கு அது முதலிருந்தே இல்லை. அது ஒன்றை மாத்திரம் நான் விட்டு விட அவசியம் ஏற்படவில்லை. எனக்கு புகழோ நன்மதிப்போ துவக்கத்திலிருந்தே இல்லை. நான் துவக்கத்தில் மலையில் வாழும் எளியவனாயிருந்தேன். எனவே எனக்கு ஒன்றுமே இருக்கவில்லை... ஆனால் அது என்னவானாலும் எனக்குக் கவலையில்லை. நான் எதை வேண்டுமானாலும் இழந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் மூடனாக ஆக ஆயத்த மாயுள்ளேன், நீங்கள் என்னை உருளும் பரிசுத்தர், மந்திரவாதி, பிசாசு, மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிபவன் என்று கூப்பிட்டாலும் நான் கவலை கொள்ள மாட்டேன். எனக்கு இயேசு வேண்டும்! அதுவே என் முக்கியக் குறிக்கோள். அது எந்த மட்டத்தில் இருந்தாலும் எனக்கு கவலை யில்லை. அவருடைய மட்டத்தில் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். எது சரியென்று நான் நினைப்பதோ, அல்லது வேறு யாரும் கூறுவதோ அல்ல. எது சரியேன்று தேவன் கூறுகிறாரோ அதுவே என் முக்கியக் குறிக்கோள். அது உண்மை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறியிருந்தால், அந்த மட்டத்தில் அவரை நான் காண விரும்புகிறேன்.  118. நான் கம்பங்களுக்கு பிரசங்கித்து, பிஸ்கோத்தை தின்று தண்ணீர் குடிக்க நேரிட்டாலும், எனக்கு சுவிசேஷமே வேண்டும். கிறிஸ்து எந்த மட்டத்தில் வருவாரோ, அந்த மட்டத்திலேயே கிறிஸ்து எனக்கு வேண்டும்.  119. தாய் கழுகு கூட்டுக்குள் சென்று, மிருதுத்தன்மை அனைத்தும் போக்கி விடுகிறது. அப்பொழுது கழுகுக்குஞ்சுகள் உட்காரும் போதெல்லாம் கடினமானதின் மேல்தான் உட்கார வேண்டும். அது ஒருவிதமான ஒட்டும் தன்மை வாய்ந்தது, (sticky). அதுதான்..... பிசாசு என்ன வேண்டுமானாலும் ...... அவர்கள் செய்யாத வரைக்கும்....  ''ஓ, நேற்றிரவு நீ இரட்சிக்கப்பட்டாயா?" “ஆம், ஆம், உ, ஊ, ஆம் நான் இரட்சிக்கப்பட்டேன்'' ''ஓ, அதைக் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்''. ஆனால் அதற்கேற்ற வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தால் அவர்கள், ''உருளும் பரிசுத்தர் இன்னார் இன்னார்; நீ எந்த கூட்டத்தை சேர்ந்து விட்டாய் என்று அறிகிறேன்'' என்கின்றனர்.  120. பாருங்கள், எப்பொழுதாகிலும் ஒருமுறை நீங்கள் ஒட்டிக் கொள்ள அவர் அனுமதிக்கிறார். இவ்வுலகத்துடன் நீங்கள் பழக்கிக்கப்பட அவர் விரும்புதில்லை, பாருங்கள், அதனின்று நீங்கள் விலக .... அந்த தாய் கழுகு தன் குஞ்சுகள் கோழிக் குஞ்சுகளைப் போலாக விரும்பவில்லை. அந்த கூட்டை விட்டு அவை வெளிவர வேண்டுமென்றே அது விரும்புகிறது. அவைகள் கன்மலையிலிருக்கின்றதோ அல்லது வேறெங்கோ உள்ளது, அவைகளுக்காக அது மேலான ஒன்றை வைத்துள்ளது. தேவனும் தமது சபைக்கு மேலான ஒன்றை வைத்துள்ளார். ''நான் ஒரு பெந்தெகொஸ்தேகாரன்'' என்று சொல்லிக்கொண்டு திருப்திய டைந்து விட வேண்டாம். 121. ஒரு முறை ஒருவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே...'' என்றார். ஆர்கன்ஸாசைச் சேர்ந்த அந்த வயோதிபர் குணமடைந் தார். அவர் பல ஆண்டுகளாக தெருவில் பென்சில் விற்றுக் கொண்டிருந்தார். அவர் குணமடைந்து அடுத்த நாள் கக்கதண்டங் களை கையில் பிடித்துக்கொண்டு, "இயேசு என்னிடம் வந்ததால், இவை இனி எனக்குத் தேவையில்லை' என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட பலகையுடன் தெருவில் நடந்து சென்றார். அன்றிரவு அவர் ராக்கிலுள்ள ராபின்ஸன் நினைவு அரங்கத்தில் இப்படி நின்று கொண்டு, "சகோ. பிரன்ஹாமே, ஒரு நிமிடம். நீங்கள் ஒரு நசரீனைப் போல் பிரசங்கிக்கின்றீர்கள் (அவர் நசரீன் குழுவைச் சேர்ந்தவர்), இங்குள்ள பெரும்பாலார் பெந்தெகொஸ்தேயினர் என்று காண்கிறேன். ஆனால் யாரோ ஒருவர் நீங்கள் பாப்டிஸ்டு என்று கூறினார். எனக்குப் புரியவில்லை '' என்றார்.  122. நான், ''ஓ, அது மிகவும் சுலபம். நான் பெந்தெகொஸ்தே நசரீன் பாப்டிஸ்டு'' என்றேன். அது முற்றிலும் உண்மை . ஆம், ஐயா.  123. ஓ சகோதரனே, அந்த பெயர்கள்! நான் மாடுகளை மலையின் மேல் ஓட்டிச்செல்வது வழக்கம். அங்கிருந்த காட்டு அதிகாரி உள்ளே வரும் மாடுகளை கவனித்துக் கொண்டேயிருப்பான். நாங்கள் வைத்திருந்தது டிரைபாட் ரக மாடுகள், கிரைம்ஸ் டயமண்ட் டீ பார்ரக மாடுகளை மேலே ஓட்டி வந்தார். வெவ்வேறு ரக மாடுகள் கடந்து சென்றன. பண்ணை காவலன் ரகத்தின் மேல் இரத்தச் சீட்டையே கவனித்தான், ஆமென்! 124. தேவன் அதை தான் கவனிக்கப் போகிறார். அவர் இரத்த சீட்டை கவனிக்கிறார். உன் மேல் எந்த ஸ்தாபனப் பெயர் உள்ளதென்று அவர் கவலை கொள்வதில்லை. ஏன்? நல்ல ஜாதி ஹெரிஃபோர்டு மாடுகளைத் தவிர வேறெதுவும் புல்வெளிக்குள் பிரவேசிக்க முடியாது. 125. அது போன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் மறுபடியும் பிறந்தவனேயன்றி வேறெவரும் பரலோக வாசல் களுக்குள் பிரவேசிக்க முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எவ்வளவு நல்ல போதகர் எவ்வளவு நல்ல சபை உறுப்பினர் என்பதைக் குறித்தெல்லாம் எனக்குக் கவலையில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிறந்து இரத்தச் சீட்டை உங்கள் மேல் பெற்றிராவிடில், நீங்கள் உள்ளே போகவே முடியாது. அவ்வளவுதான், ''நான் இரத்தத்தைக் காணும்போது, உன்னைக் கடந்து செல்வேன்'', அவ்வளவுதான். இரத்தச் சீட்டு சரியாயிருக்கு மானால், அவர் உங்களை உள்ளே அனுமதிப்பார். தேவன் சபையின் மேலுள்ள தமது சொந்த குமாரனின் இரத்தத்தையே கவனிப்பார். 126. இந்த தாய் கழுகு அந்த குஞ்சுகளை கவனிக்கிறது. ஓ, ஒவ்வொரு முறையும்... அவைகளால் கூட்டில் உட்கார முடியவில்லை. எங்கும் முட்கள், முட்கள், முட்கள்.  127. கூட்டத்திலுள்ள பெந்தெகொஸ்தே சபை கூட்டிலேயே இருந்து விடாதபடிக்கு, வேறெதாகிலும் ஒன்றை செய்ய வேண்டியதாயுள்ளது. அது பரவாயில்லை.... நான் ஸ்தாபனங்களை குறை கூறுவதாக எண்ண வேண்டாம். ''அதை உங்கள் நிறுத்தும் ஸ்தலமாக ஆக்கிவிட வேண்டாம்'' என்று மாத்திரமே கூறுகிறேன். நீங்கள் நல்லவர்கள், எனக்கு ஸ்தாபனங்களைப் பிடிக்கும். நான் அவை ஒவ்வொன்றையும் சேர்ந்தவன் ... பாருங்கள்? நிச்சயமாக. ஆம் ஐயா. நானும் ஸ்தாபனத்தில் தான் பிறந்தேன், சபையிலுள்ள ஒவ்வொருவரும். நான் அதில் பிறந்தேன். ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள். இந்த ஸ்தாபனத்தில் நின்று விடாதீர்கள். நீங்கள் தனியாகப் பறக்கும் வரைக்கும் தேவனுடன் செல்லுங்கள்.  128. முதலாவதாக என்ன தெரியுமா, தாய் கழுகு தன் குஞ்சுகளுக்கு சிறிது அனுபவத்தைக் கொடுக்கத் தீர்மானிக்கிறது. அவை சபையை சேர்கின்றன, எல்லாமே நன்றாயுள்ளது. ஆனால் "ஒட்டுந்தன்மை '' (sticky) தொடங்கினால் ஏதோ தவறுள்ளது. 129. ஒரு நாள் தாய் கூட்டுக்கு முன்னால் வருகிறது. அது சிறு குஞ்சுகளைக் காண்கிறது. அவைகளுக்கு நிறைய தளர்ந்த இறகுகள் உள்ளன. இந்த தளர்ந்த இறகுகளுடன் அவைகளை வானத்தில் பறக்கக் கொண்டு சென்றால் அவை கழுத்தை முறித்துக் கொள்ளும் என்று அதற்கு தெரியும்.  130. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெந்தெகொஸ்தே சபை தங்கள் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்களும் தங்கள் கழுத்தை முறித்துக் கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு நிறைய தளர்ந்த இறகுகள் உள்ளன. அது தான் விஷயம். 131. தாய் கழுகு என்ன செய்கிறது தெரியுமா? அது கூட்டின் மேலேறி தன் பெரிய சிறகுகளால் காற்று வீசுகிறது. ஓ, நீங்கள் எப்பொழுதாவது விமானத்துக்கு முன்பு நின்றிருந்தால் அறிவீர்கள்... அந்த பலத்த காற்று குஞ்சுகளின் இறகுகள் மேல் அடிக்கும் போது, தளர்ந்த இறகுகள் அனைத்தும் எல்லா பக்கங் களிலும் பறந்து செல்கின்றன. நான் உங்களுக்குச் சொல் கிறேன், பெந்தெகொஸ்தே சபையிலிருந்து உலகம் அனைத்தும் எடுத்துப் போட்டு அதை தனியாக பறக்கச் செய்ய, அதற்கு பலத்த காற்றின் மூலம் கூடு குலுக்கல்' அனுபவம் இன்று அவசியமாயுள்ளது. 132. நமக்கு இன்னுமொரு பழைய காலத்து சுவிசேஷ தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் எழுப்புதல் அவசியமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை . நமக்கு ஒரு புதிய ஜனாதிபதி அவசியமில்லை. நமக்கு ஏற்கனவே ஒருவர் இருக்கிறார் - விலையுயர்ந்த உடை உடுக்கும் டாம்பீகன் (dandy). நமக்கு நகராண்மைத் தலைவர்கள் அவசியமில்லை. அவர்கள் எப்படியிருந் தாலும்.... அது அவர்களுடைய பொறுப்பு. ஆனால் நமக்கு தேவை என்னவெனில், சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சபையை மறுபடியும் பெந்தெகொஸ்தேவுக்கு - கழுகு அனுபவத்துக்கு - கொண்டு வரக்கூடிய போதகர்களே. அது தான் சபைக்கு அவசியம். ஓ, நீங்கள் கோழிக்குஞ்சாக இருக்க விரும்ப மாட்டீர்கள். நீங்கள் கழுகுகள்! நீங்கள் கழுகு ஆகாரம் உண்ண வேண்டும். 133. தாய் கழுகு அங்கு உட்கார்ந்து கொண்டு அந்த சிறு தளர்ந்த இறகுகள் அனைத்தையும் நீக்குகிறது. அது அப்படி செய்யா விட்டால்... பறப்பதற்கு அவைகளுக்கு போதிய இறகுகள் இல்லா விடில், அது அவைகளைக் கொண்டு செல்லாது - குஞ்சு பருவத்தில் தோன்றின இறகுகள் அனைத்தும் போய், புது இறகுகள்வரும் வரைக்கும். பிறகு அது அங்கு வந்து கூச்சலிடுகிறது. அவைகளுக்கு சிறிது அனுபவத்தைத் தர அது ஆயத்த மாயுள்ளது. அது தன் பதினான்கு அடி நீளமான சிறகுகளை விரிக்கிறது. குஞ்சுகள் அதன் மேல் ஏறுகின்றன - அது அவைகளுடன் பேசுகின்றது. ஏனெனில் அவை ஏற்கனவே அதன் சத்தத்தை கேட்டிருக்கின்றன. அவை அதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளன.  134. “இப்பொழுது பிள்ளைகளே, நீங்கள் தனியே பறக்க உங்களை கொண்ட செல்லப் போகின்றேன்.'' ஒவ்வொரு குஞ்சும் அதன் கால்களால், தாய் கழுகின் செட்டைகளில் ஒன்றை இறுகப் பற்றிக் கொண்டு, அதன் அலகை இறகுகளின் மேல் வைக்கப் பிடித்துக் கொள்கிறது. அப்பொழுது அது விழாது. அந்த செட்டைகளிலுள்ள இறகுகள் ஐம்பது கழுகு குஞ்சுகளை ஏற்றிக்கொள்ளக் கூடிய சக்தி வாய்ந்தது. அது இறகை இப்படி உயர்த்தி கற்பாறையிலிருந்து பறந்து செல்கிறது. அது உயர, உயர, உயர பறந்து, மிக உயரத்திலுள்ள நீல வானத்தை அடைகிறது. இந்த குஞ்சுகள் இதற்கு முன்பு அங்கு செல்லவில்லை. ஓ, அவைகளுக்கு அற்புத மான நேரம் உண்டாயிருக்கிறது. 135. முதலாவதாக தாய் கழுகு என்ன செய்கிறது தெரியுமா? அது திரும்பி, குஞ்சுகள் ஒவ்வொன்றையும் உதறித் தள்ளி விடுகிறது. அவை கழுகுகள். அவைகளுக்குப் பறக்கத் தெரிய வேண்டும். அது முற்றிலும் உண்மை. அவைகளை உதறித் தள்ளி தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள விட்டு விடுகிறது. அவைகளில் சில குஞ்சுகள்..... அது ''சரி பிள்ளைகளே, நீங்கள் கழுகுகள். பறக்க முயலுங்கள்'' என்று சத்தமிடுகிறது. 136. நீங்கள், ''நான் இந்த சபையைச் சேர்ந்தவன், இதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது'' என்று சொல்லும் வரைக்கும் பறக்க மாட்டீர்கள். நீங்கள் ஒருமுறை வானத்திலிருந்து உதறித்தள்ளப் படுவது அவசியம். அந்த சிறு குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கின்றன. அது, “பிள்ளைகளே, உங்கள் செட்டைகளை அடியுங்கள். உங்கள் சிறு விசுவாசத்தை மேலும் கீழும் அடியுங்கள். நீங்கள் போதிய உயரத்தில் இருப்பதால் பூமியில் விழமாட்டீர்கள்'' என்று சத்தமிடுகிறது. 137. என்ன தெரியுமா? பிறகு அது என்ன செய்கிறது? அது ஒரு புறம் ஒதுங்கி அவைகளை கவனிக்கிறது. அது சுற்றிலும் பறந்து கொண்டிருக்கிறது. இங்கு அந்த குஞ்சுகள், பெந்தெகொஸ்தே எழுப்புதலில் நடப்பது போன்று தலைகீழாக ஒன்றன் மேல் ஒன்று உருண்டு, தங்களால் இயன்றவரை செட்டைகளை அடிக்கின்றன.... அவை கவலைப்படுவதில்லை. அவைகளுக்கு தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் தாய் மீது அபார நம்பிக்கை உள்ளது. சபையும் அவ்வாறிருக்க வேண்டும்.... 138. இந்த குஞ்சுகளில் ஒன்று தள்ளாடினால், தாய் கழுகு தன் பெரிய செட்டைகளை விரித்து கீழே பறந்து வந்து அதை சுமந்து மறுபடியும் கிருபைக்குள் கொண்டு செல்கிறது. (இது பாப்டிஸ்டு போதகம் அல்ல, அது வேதாகமம்). அதை மறுபடியும் அங்கு கொண்டு வந்து, மறுபடியும் உதறித்தள்ளி, அது புதிதாகத் தொடங்கச் செய்கிறது. ஆமென்! 139. இந்த கழுகுக் குஞ்சுகளுக்கு, தங்கள் தாய் அவைகளுக்கு உதவி செய்து, அவைகளை மறுபடியும் சுமந்து, அவைகளை அங்கு கொண்டு சென்று அவைளை உதறி கீழே தள்ளி, அவைகள் மறுபடியும் தொடங்கச் செய்தல். மேம்பட்ட நம்பிக்கையுண்டு. ''ஓ கர்த்தாவே . நான் பின் பற்றினாலும் தவறினாலும், நான் எழுந்து மறுபடியும் முயற்சி செய்யட்டும்.''  140. நீங்கள் மறுபடியும் செல்லுங்கள். தேவன் உங்களை உயர்த்தி மேலே கொண்டு சென்று மறுபடியும் உங்களை உதறித் தள்ளுவார். நீங்கள் விழாமல் சமநிலையில் இருக்க முயலுங்கள். நீங்கள் சென்று கொண்டேயிருங்கள். நீங்கள் பறக்கக் கற்றுக் கொள்ளும் வரைக்கும் செட்டைகளை அடித்துக் கொண்டிருங்கள். ஓ, என்னே! ஏழை கோழிக்குஞ்சுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஏனெனில் அது மேலே செல்லவேயில்லை. அதன் முன்னோர்களும் ஒருக்காலும் மேலே சென்றதில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம் சபையை சேர்ந்து கொண்டு உட்கார்ந்திருத்தலே - தானியக் களஞ்சிய முற்றத்தில் - மற்றதைக் குறித்து அதற்கு அதிகம் தெரியாது. 141. ஒரு சமயம் ஒரு மனிதன் ஒரு கோழியை அடைகாக்க வைத்தான். அவனிடம் போதிய முட்டைகள் இல்லை. அவன் ஒரு கூட்டைக் கண்டான்.... அவன் மேலேறி கழுகு முட்டையைக் கொண்டுவந்து, அதையும் கோழியின் அடியில் அடை காக்க வைத்தான். அந்த முட்டைகள் பொறித்த பிறகு, அந்த கழுகுக் குஞ்சு கோழிக்குஞ்சுகளைக் காட்டிலும் வித்தியாசமாக விகார ரூபம் கொண்டதாயிருந்தது. 142. அப்படித்தான் அது வருகிறது. ஒவ்வொரு அடை காத்தலுக்கும் ஒன்று அப்படித்தான் அது நிகழ்கிறது. அது உண்மை .  143. இதோ அது விகார ரூபம் கொண்டதாயிருந்தது. கோழி இடும் சத்தத்தை அதனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கோழி முற்றத்திலுள்ள எருக்குவியலில் நடந்து ... ''இன்றிரவு நாங்கள் சமூக இரவு விருந்து வைக்கப்போகின்றோம், இதையெல்லாம் நாங்கள் செய்யப்போகின்றோம். க்ளக், க்ளக், க்ளக், க்ளக்'' என்றது. சூதாட்ட விளையாட்டு விருந்துகளில் அந்த அழுக்கான பொருளை உண்டு, அரைநிர்வாணமாய் - இன்னும் தொலைகாட்சி போன்ற அர்த்தமற்ற காரியங்கள்; ஆனால் இதுவோ கழுகுக் குஞ்சு. அதற்கு இது ஒத்துப்போகவில்லை. அதை முகர்ந்தாலும் கூட அதற்கு வாந்தி வந்தது. ''ஐயோ, என்னால் இதை உண்ண முடியாது'' என்றது. அது சுற்றி சுற்றி நடந்து வந்தது - காண்பதற்கு விகாரமான ஒன்றாக இருந்தது.  144. கோழி, “ஓ, தேனே , வா. இன்றிரவு நாங்கள் பெரிய விருந்து வைக்கப்போகிறோம். நாங்கள் இவைகளையெல்லாம் பரிமாறப் போகிறோம்'' என்றது. 145. ஆனால் கழுகுக் குஞ்சுக்கு அதொன்றும் வேண்டாம். அது சுற்றி சுற்றி நடந்து, '' என்ன? நான் வினோதமான குஞ்சாக இருக்கிறேன்'' என்றது.  146. சகோதரனே, உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒரு மனிதன் தேவனுடைய பிள்ளையாகப் பிறந்திருந்தால், கோட் பாடுகளும் ஸ்தாபனங்களும் அவனுக்கு ஒருக்காலும் திருப்தியளிக் காது. இல்லை, ஐயா. உலகத்தின் காரியங்கள் - நமது நாளில் இன்று நவீன சபைகள் நடத்தும் கூடைப்பந்து விளையாட்டுகள், விருந்துகள், சீட்டாட்டம் போன்ற இப்படிப்பட்டகளியாட்டுகள் - அவர்கள் தேவனை விசனப்படுத்தினர் என்பதில் வியப்பொன்று மில்லை. ''தேவன் எங்கே?'' அவர்கள் தேவனை விசனப்படுத்தி அவர்களை விட்டு துரத்தி விட்டனர். அது முற்றிலும் உண்மை . ஆம், ஐயா. கோழிக் குஞ்சுகளுக்கு அவையெல்லாம் பிடிக்கும். ஆனால் கழுகுளுக்கோ பிடிக்காது. அது கழுகு ஆகாரமல்ல.  147. கழுகுக்குஞ்சு முற்றத்தில் சுற்றி சுற்றி வந்தது. இந்த கோழிக்குஞ்சுகள் அனைத்தும் ஓரிடத்திற்கு ஓடும். தாய் கோழி மிகவும் அசுத்தமாக பொருளைக் கிளரும். அவை ஓடிப்போய் அவைகளை சாப்பிடும். ஹம்ப்! ''வா, வா, எங்களோடு சேர்ந்து கொள்ள.'' ஆனால் அதுவோ பிரித்தெடுக்கப்பட்ட ஒன்று. ஆம் ஐயா. அதற்கு அந்த ஆகாரம் பிடிக்கவில்லை, அது அதற்கு சரியாகயில்லை. அதன் மணம் சரியாக இல்லை. அங்கு சரியான சூழ்நிலை இருக்கவில்லை. இவையெல்லாம் அதற்கு பிடிக்கவில்லை. அது "வேண்டாம், வேண்டாம்'' என்று சொல்லிவிட்டது. 148. ஒரு நாள் தாய் கழுகு அதை தேடி வந்தது. அவர் என்னைத் தேடிவருவதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அது தானியக்களஞ்சிய முற்றத்தின் மேல் பறந்து வந்து கீழே நோக்கிப் பார்த்தபோது, தன் குஞ்சைக் கண்டது. உடனே அது சத்தமிட்டு, "தேனே, நீ கோழிக்குஞ்சு அல்ல. நீ என்னுடையவன்'' என்றது. கழுகு குஞ்சு சத்தத்தைக் கேட்டவுடன், அது மேலே நோக்கிப் பார்த்தது. அது நல்லதாக ஒலித்தது. அது கழுகின் இயல்பைக் கொண்டதாயிருந்தது. அதன் இயல்பு… ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்.'' அது ஆமென்'' என்று சத்தமிட்டு மறு உத்தரவு அருளினது. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதே. அப்படி செய்தால், உன்னிடத்தில் தேவனின் அன்பு இல்லை.'' கழுகுக் குஞ்சு, 'ஆமென்! அது நல்லதாக ஒலிக்கிறது'' என்றது. "தேனே, நான் வரும்போது, நீ குதித்து ஏறிக்கொள், நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று. விசுவாசம் என்னும் உன் சிறு செட்டைகளை அடி. அது உன்னை பறக்கச் செய்யும்.'' ''அம்மா, நான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது?''  149. ''உன் செட்டைகளை அடி. அவ்வளவுதான். நீ அங்கிருந்து வெளியேறுவாய். உன் விசுவாசத்தை எடுத்துக் கொண்டு, அப்படி செய். செட்டைகளை மாத்திரம் அடி. நீதுவக்கத்திலேயே ஒரு கழுகு. செட்டைகளை அடி.'' 150. தாய் கழுகு மேலே சுற்றிலும் பறந்து, ''நீ இருக்கும் இடத்தில், என்னுடைய ஒருவனைப் போல் காணப்படுகிறாய்'' என்றது. அந்த கழுகுக் குஞ்சு நான்கைந்து முறை மேலும் கீழும் குதித்தது - தன் சிறு கைகளைத் தட்டுவதுபோல் செட்டைகளை ஒன்றாக அடித்தது. முதலாவதாக என்ன தெரியுமா, அது தரையிலிருந்து தன் கால்களை உயர்த்தினது. 151. ஆனால் அது என்ன செய்தது தெரியுமா? இந்த கழுகுக் குஞ்சு தானியக் களஞ்சிய முற்றத்திலுள்ள கம்பத்தின்மேல் உட்கார்ந்து கொண்டது - ஒரு பெரிய பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் மத்தியில். என்ன தெரியுமா? தாய் கழுகு மறுபடியும் பறந்து வந்தபோது, அது கால் சட்டை அணிந்து, தலைமயிரைக் கத்தரித்து, முகத்தில் வர்ணம் பூசியிருந்ததைக் கண்டது. அது, "தேனே, நீ பெந்தெகொஸ்தே கழுகாக காணப்படுவதற்கு பதிலாக, பெந்தெ கொஸ்தே பருந்தாக காட்சியளிக்கிறாய். இதைக் காட்டிலும் இன்னும் சிறிது உன்னைக் கழுவிக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் நான் உன்னிடம் வரவே முடியாது'' என்றது. உண்மை .  152. உங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக இதை கூறவில்லை. உங்களிடமிருந்து சிலவற்றை வெட்டி நீக்கவே விரும்புகிறேன். சகோதரனே, இதை உன்னிடம் கூற விரும்புகிறேன். பெந்தெ கொஸ்தே சபை பிரசங்க பீடத்திலிருந்து இருக்கைகள் வரைக்கும் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியம், அது முற்றிலும் உண்மை . பாரமானதை தள்ளிவிட்டு... நமக்கு எழுப்புதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை - கழுகுகளின் ஆகாரத்தை உண்டு ஜெப கூட்ட ஆராதனைகளுக்கு போவதற்கு பதிலாக இரவில் வீட்டில் தங்கி விருப்பமான தொலைக்காட்கி நிகழ்ச்சிகளைக் காண்பது ... பெண்கள் அவலட்சணமான ஆடைகளை அணிதல், மனிதர் சமுதாய மது அருந்தி ஒருவருக்கொருவர் மோசமான நகைச்சுவை துணுக்குகளைக் கூறிக் கொள்ளுதல் போன்றவை, மனிதனே நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இப்படிப்பட்ட குழப்பத்தில் தேவன் கீழே இறங்கி உங்களை அணுக முடியாது. 153. உங்களுக்கு நகரத்தில் மிகப் பெரிய சபைகள் இருக்கக்கூடும். உங்களுக்கு முன்பைக் காட்டிலும் அதிக பணம் இருக்கக்கூடும். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 'மேலான நுண்ணறிவு படைத்த கூட்டம்' என்று நீங்கள் அழைப்பவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கக் கூடும். மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் சிறப்பான உடைகளை உடுத்தி யிருக்கலாம். ஆனால் சகோதரனே, தேவனுக்கு சுத்த இருதயமும் சுத்த கைகளுமே வேண்டும். அவருக்கு சுத்தமாக்கப்பட்ட சபை வேண்டும். அப்பொழுது அவர் தம்மை காண்பிப்பார். தேவன் தமது செட்டைகளை விரித்து அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்னும் தமது வல்லமையை விளங்கப்பண்ணும் போது, கழுகு குஞ்சுகள், 'ஆம், ஆண்டவரே. அது தான் எனக்கு வேண்டும். அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனிடம் நான் வருகிறேன்'' என்று உரைக்கும். நிச்சயமாக. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.  154. என்னே, நமது நேரம் எங்கு கடந்து விட்டது! இப்பொழுது பிரசங்கித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்னும் உணர்ச்சி எனக்கு உண்டாகின்றது.  155. ஓ , பெந்தெகொஸ்தே சபைக்கு சுத்தமாக்கப்படுதல் அவசியமாயுள்ளது .... அதற்கு வெளுக்கப்படுதல் அவசிய மாயுள்ளது. அதற்கு தூய்மையாக்கப்படுதல், துலக்கப்படுதல் அவசியமாயுள்ளது. ஜனங்களே, நீங்கள் உலகத்துக் குறியவர் களல்ல. மற்ற ஜனங்களைப் போன்றிருக்க முயறிசிக்காதே. நீ தேவனுடைய குமாரன், குமாரத்தி. ஒரு மாட் டில்லன் (Mah Dillon) - ஐப் போன்றோ அல்லது பீபடி எர்னியைப் போன்றோ (Peabody Ernie) அல்லது அதைப் போன்ற மனிதரைப் போன்றோ இருக்க முயற்சி செய்யாதே. நீ அல்ல.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லை. சகோதரனே, அது உங்களுக்கு குமட்டுகிறது என்று எனக்குத் தெரியும். அது உங்களுக்கு குமட்டல் உண்டாக்குகிறது. 156. தென்பாகத்தை சேர்ந்து என் தாயார் என்னிடம் கூறுவது வழக்கம்... சனி இரவன்று சிறுவர்களாகிய நாங்கள் வருவோம். அங்கு ஒரு பெரிய மரத்தொட்டி இருந்தது. என் தாயார் அதில் தண்ணீர் ஊற்றி எங்களைக் குளிப்பாட்டுவார்கள். நான் தான் பத்து பேர்களில் இளையவன். தொட்டியிலிருந்து அதே தண்ணீரில் நான் கடைசியாக குளிப்பாட்டப்படுவேன் - அதை சற்று சூடாக்கி பிறகு அம்மா என்னை அழைத்துச்செல்வார்கள்.... நாங்கள் மிகவும் ஏழ்மை யான நிலையில் இருந்தோம். அவர்கள் பழைய தோல்களிலிருந்து கொழுப்பை எடுக்க வெயிலில் போடுவார்கள். எங்களுக்கு வெண்ணெய் உருக்கி எடுத்து அதை சோள ரொட்டியின் மேல் தடவி கொடுப்பார்கள். நாங்கள் கறுப்பு - கண் பட்டாணி, சிகப்பு முள்ளங்கி கீரை, சோள ரொட்டி இவைகளை உண்போம். 157. எங்களுக்கு அலர்ஜி' போன்றவை உண்டாயிருந்தன. ஒவ்வொரு சனி இரவும் அம்மாள் எங்களுக்கு ஆமணக்கு எண்ணெய் குடிக்கக் கொடுப்பார்கள். அதன் மணம் கூட என்னால் சகிக்க முடியாது. நான் மூக்கைப் பிடித்துக்கொண்டே ''அம்மா, வேண்டாம்! வேண்டாம்! என்னால் சகிக்க முடியிவில்லை'' என்பேன். அம்மா அப்பொழுது எனக்கு நல்வார்த்தை கூறுவார்கள். அவர்கள், ''ஆகவே, அது குமட்டல் உண்டாக்காமல் போனால், உனக்கு ஒரு பயனும் தராது'' என்பார்கள்.  158. அப்படித்தான் வார்த்தையை பிரசங்கித்தலும் கூட. அது உங்களுக்கு குமட்டல் உண்டாக்கினால், உங்கள் ஆவிக்குரிய ஜீரண உறுப்புகளை சரிபடுத்தும். இல்லையென்றால் அதனால் ஒரு பயனுமில்லை. அது உண்மை. வார்த்தை உங்களை உண்மையில் விடுதலையாக்குகிறது! அது எல்லாவற்றையும் அறுத் தெரிந்து...  159. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சபைக்கு பரிசுத்த ஆவியின் எழுப்புதல் அவசியமாயுள்ளது. அதற்கு வீட்டு சுத்தி கரிப்பு அவசியம். இவை கழுகுகள். இவைகளை கோழிக்குஞ்சு ஆகாரத்தினால் போஷிக்காதீர்கள். இவை கழுகுகள். இவர்கள் பறக்க வேண்டும், இல்லையேல் மரிக்க வேண்டும் என்னும் இடத்துக்கு இவர்களை அனுப்புங்கள். அவ்வளவுதான். தேவன் தமது பிள்ளைகளை கவனித்துக் கொள்வார். அவர் ஒருக்காலும் வெகுதூரத்தில் இல்லை. உங்களை சுமந்து செல்ல அவர் எப்பொழுதும் அருகாமையில் இருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  160. இப்பொழுது ஜெபத்துக்காக நாம் தலைவணங்குவோம். உங்களில் எத்தனை பேர் ஜெபத்தில் நினைவு கூரப்பட விருப்ப முற்றவர்களாய், ''கர்த்தாவே , என்மேல் இரக்கமாயிரும். எனக்கு கழுகு எண்ணங்களைத் தாரும். எனக்கு கழுகு விருப்பங்களைத் தாரும். எனக்கு கழுகு வாழ்கையைத் தாரும். கர்த்தாவே, நான் உயரே நீலவானத்தில் பறக்கட்டும். அங்கு விசுவாசிக்கிறவர் களுக்கு எல்லாம் கூடும். எனக்கு விசுவாசத்தைத் தாரும். என் செட்டைகள் வளரட்டும். நான் இயேசுவைக்காணும் மட்டும், என் செட்டைகளைச் சுற்றிலுமுள்ள தசைகள் வளரட்டும்'' என்று கூற விரும்பு கிறீர்கள்? ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.  161. பரலோகப் பிதாவே, ஓ, செய்தியானது குற்றப்படுத்துவது போல் ஒருக்கால் ஒலித்திருகக்கும். ஆனால் அப்படி செய்ய நினைக்கவில்லை. அது ஒரு சிறு .... கர்த்தாவே, அந்த ஒரு வழியில் தான் நான் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும். சபையைக் குலுக்குவதற்காக நீர் அவர்களை அடைய முயல்கிறீர் என்று நான் நம்புகிறேன். உம்முடைய இந்த பெரிய சுதந்தரம், இந்த பெரிய பெந்தெகொஸ்தே சபை. அது பெரிய சபை. நீர் எல்லாவிதமான ஆவிக்குரிய வரங்களையும், எல்லாவிதமான அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்களுக்கு அருளியிருக்கிறீர். இருப் பினும் சில நேரங்களில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு கோழிக் குஞ்சுகளைப்போல் உள்ளனர். ஓ, தேவேன, அவர்கள் கழுகுகள் என்பதைக் காண்பார்களாக. அவர்களால் பறக்க முடியும். அவர்கள் தங்கள் விசுவாசத்தை எடுத்துக் கொண்டு அதினின்று பறந்து செல்வார்களாக. ''அது நடக்காது, அது ஒன்றுமில்லை'' என்று சொல்வதிலிருந்து அவர்கள் விலகுவார்களாக. 162. ஓ, தேவனே, இங்குள்ள ஒவ்வொருவரையும் இன்று பிற்பகல் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு வரும் யேகோவாவின் செட்டைகளின் கீழ் மிக அருகாமையில் ஆகாயத்தில் வட்டமிடும்படி செய்வீராக. பிதாவே, இதை அருளும். இவர்களை உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 163. தேவனாகிய கர்த்தர் என்ன செய்வார் என்பது அவரைப் பொறுத்தது. இப்பொழுது நாம் ஜெபவரிசையை அமைக்கப் போகிறோம்... இன்றிரவு நீங்கள் சபைக்கு செல்லவேண்டுமென்று விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கர்த்தரை நேசிக்கிறீர்களா? ஆமென். இன்னும் ஒரு முறை நாம் பாடுவோம். அப்பொழுது டுல்சாவில் இந்த பெரிய கூட்டம் பாடுவதை நான் கேட்கமுடியும். நேசிக்கிறேன் நேசிக்கிறேன்.  முந்தி அவர் நேசித்ததால்  சம்பாதித்தார் என் இரட்சிப்பை  கல்வாரி மரத்தில் சரி. இப்பொழுது அதை தொனிக்க செய்வோம். செய்தி முடிந்து விட்டது. இப்பொழுது அவரை ஆராதிப்போம். நேசிக்கிறேன் நேசிக்கிறேன்.  முந்தி அவர் நேசித்ததால்  சம்பாதித்தார் என் இரட்சிப்பை  கல்வாரி மரத்தில் 164. ஜனக்கூட்டம் அமைதியாகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாம் தலைவணங்கி நமது கரங்களை உயர்த்துவோம். நேசிக்கிறேன் நேசிக்கிறேன்  (எங்கள் அருகில் வாரும், கர்த்தாவே ) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 165. (சகோ. பிரன்ஹாம் ஜெபவரிசையை அழைக்கிறார் - ஆசி) அது என்ன? 100 அல்லது 50? 50? ஜெப அட்டை எண் - உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் ஒன்று - உங்களால் நிற்க முடிந்தால் எழுந்து நில்லுங்கள் - H-H எண் 1. உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் 1-எழுந்திருந்து .... ஸ்திரீயே, நீர்தான் அந்த நபரா? H... எண் 1, இங்கே நேராக வந்து நில்லுங்கள். H எண் 2.... | 166. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி ) ..... காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேலர். அது சரியா? எத்தனை வம்சங்களைச் சேர்ந்த மக்கள் பூமியில் உள்ளனர்? மூன்று வம்சங்களைச் சேர்ந்த மக்கள் பூமியில் உள்ளனர். மூன்று வம்சங்கள். காம் சேம்யாப்பேத் வம்சத்ததார். அது யூதர், புறஜாதியார், சமாரியர். சமாரியர்பாதி யூதர் பாதி புறஜாதியார். நீங்கள் கவனித்தீர்களா? பெந்தெகொஸ்தேயின் திறவுகோல்களை இயேசு பேதுருவுக்கு அளித்தாரென்று எத்தனை பேருக்கு தெரியும்? அது உண்மை . அவன் யூதர்களுக்கு எருசலேமில் திறவு கோல்களினால் இராஜ்யத்தை திறந்தான். அது சரியா ? 167. பிலிப்பு சென்று சமாரியாவிலிருந்தவர்களுக்கு ஞானஸ் நானம் கொடுத்தான். பரிசுத்த ஆவியைப் பெற.... பேதுரு அங்கு சென்றான். ஏனெனில் அவன் திறவுகோல்களை வைத்திருந் தான். அவன் அங்கு சென்று கைகளை வைத்த போது சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். அது சரியா? கொர்நேலியுவின் வீட்டில் யார் அழைக்கப்பட்டது? பேதுரு . அன்று முதல் அதைக் குறித்து வேறொன்றும் செய்யப்படவில்லை. பாருங்கள், எல்லா சந்ததிகளும் ..... எல்லா வம்சங்களுக்கும் - காம், சேம், யாப்பேத் சந்ததியாருக்கு- சுவிசேஷம் திறந்து கொடுக்கப் பட்டது.  168. இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால் .... நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இரண்டு வகுப்பினர்இரண்டு வம்சத்தினர்- மேசியாவின் வருகைக்காக காத்திருந்தனர், அவர்கள் யார்? யூதர்களும் சமாரியரும். புறஜாதியாராகிய நாம் ஆங்கிலோ- சாக்ஸன் வம்சத்தை சேர்ந்தவர்கள். நாம் தண்டாயுதத்தை முதுகில் சுமந்து விக்கிரங்களை வணங்கினோம். நாம் மேசியா எவரையும் எதிர்நோக்கியிருக்கிவில்லை. 169. ஜெபவரிசை ஆயத்தமாகும் வரைக்கும் கூடுமான வரை உங்கள் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருக்கிறேன். அப்பொழுது எல்லாருமே அந்த வரிசைக்குள் வருவதற்கு ஆயத்தமாயிருப் பார்கள். 170. நாம் எந்த மேசியாவையும் எதிர்நோக்கியிராத காரணத்தால் எவரையுமே பெற்றுக் கொள்ளவில்லை. எனவே .... அவர் பிரசன்னமாகுதலை விரும்பின யாவருக்கும் அவர் பிரசன்னமானார். அதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவர்கள் மேசியாவைப் புறக்கணித்த பிறகு.... ஞாபகம் கொள்ளுங்கள், அவர் யூதரிடம் சென்ற போது என்ன விதமான அடையாளத்தைக் காண்பித்தார்? அவர் அவர்களுடைய இருதயங் களிலிருந்த இரகசியத்தை அறிந்தார். அவரைக் குறித்து அக்காலத்து வைதீக சபை என்ன கூறினது? ''அவன் பெயல் செபூல்; குறி சொல்பவன்'' என்று.  171. இயேசு, “நான் உங்களை மன்னித்து விடுகிறேன். ஆனால் ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் வந்து இதே காரியங்களைச் செய்வார். அதற்கு விரோதமாக எந்த வார்த்தையும் பேசினால், அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது'' என்றார். அது சரியா?  172. இப்பொழுது, கவனியுங்கள். இந்த அடையாளத்தை அவர் யூதர்களுக்கு முன்னால் செய்தார்; இதை சமாரியருக்கு முன்னால் செய்தார்; ஆனால் புறஜாதிகளுக்கு முன்னால் செய்யவேயில்லை. அப்படி அவர் செய்ததாக நீங்கள் ஒன்றையுமே காணமுடியாது. இல்லை, ஐயா. ஆனால் அவர் போவதற்கு முன்பு.... அந்த சமாரியா ஸ்திரீயிடம் கூறினார். இப்பொழுது நாம் வேசி என்றழைக்கும் இந்த ஸ்திரீயைக் கவனியுங்கள். அவளுக்கு அமெரிக்காவிலுள்ள போதகர்களில் பாதி பேரைக் காட்டிலும் தேவனைக் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. அது உண்மை . அவர்கள் அதிக நுண்ணறிவு கொண்டுள்ளதால், இயற்கைக்கு மேம்பட்ட ஆவிக்கு அவர்களிடம் இடமில்லை. 173. அவர்களில் பலர் அருமையான கிறிஸ்தவர்கள், இயற்கைக்கு மேம்பட்ட சகோதரர்கள்; ஆனால் அவர்களில் சிலர் இன்னும் கோழிக் குஞ்சுகளாயிருக்கின்றனர்.  174. அவள் அங்கு வந்தாள்... அந்த ஸ்திரீ... அவர் அங்கு சென்று, தமது சிஷர்களை அனுப்பி விட்டார். சமாரியர் எதிர்நோக்கி யிருந்தனர். எனவே அங்கு உட்கார்ந்து கொண்டார்.... சமாரியர் மேசியாவை எதிர்நோக்கியிருந்தனர் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, உங்களுக்கு யோவான் சுவிசேஷம் 4ம் அதிகாரத்திலிருந்து எடுத்துரைக்கப் போகிறேன். சமாரியா நாட்டை சேர்ந்த ஒரு ஸ்திரீகிணற்றினருகே வந்தாள். அவர் சொன்னார்... இப்பொழுது, எண் 40 முதல் 50 - H: 40-50 - உங்கள் ஸ்தானத்தில் நில்லுங்கள். சரி 40-50; இந்த எண்ணுள்ள ஜெப அட்டைகள், நீங்கள் உங்கள் இடத்தில் நில்லுங்கள்.  175. இப்பொழுது கவனியுங்கள். அந்த நாளில் அவர் கிணற்றினருகே உட்கார்ந்தார், அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அவர்கள் போயிருந்த சமயம், ஒரு அழகான ஸ்திரீ தலையில் குடத்தை சுமந்து, நடந்து வந்தாள். தண்ணீர் மொள்ள அவள் இராட்டினத்திலிருந்த கயிற்றை இறக்கின போது, யாரோ ஒருவர், "தாகத்துக்குத் தா'' என்று கூறுவதைக் கேட்டாள். அவள் பார்த்த போது, ஒரு யூதனைக் கண்டாள். அவருக்கு முப்பது வயது மட்டுமே ஆகியிருந்தது. ஆனால் அவர் ஐம்பது வயதானவர் போல் காணப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அது எத்தனை பேருக்குத் தெரியும்? 176. 'உனக்கு ஐம்பது வயதை விட அதிகமாகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டதாகச் சொல்கிறாயே?'' என்றனர். அவர், "ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பு நான் இருக்கிறேன்'' என்றார். அது உண்மை . அவர்கள், ''உனக்கு ஐம்பது வயதை விட அதிகமாக வில்லை '' என்றனர்.  177. அவள் அங்கு கிணற்றண்டை இருந்தாள். இயேசு இங்குள்ளது போன்ற ஒரு அழகான இயற்கை காட்சியின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு, “தாகத்துக்கத்தா'' என்றார் (இங்கு தென்பகுதியில் வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் இடையே உள்ள ஒதுக்குதல் போன்று அப்பொழுதும் யூதர்களுக்கும் சமாரியருக்கு மிடையே இருந்தது). அவள், ''யூதனாகிய நீர் சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் கேட்பது வழக்கமில்லையே...'' என்றாள்.  178. அவர், “ஸ்திரீயே...'' (நன்றாக கவனியுங்கள், இல்லையென்றால் இதை இழந்து விடுவீர்கள்) ''ஸ்திரீயே, நீ யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் தண்ணீரைக் கேட்டிருப்பாய். நீ அங்கு வந்து மொள்ளும் தண்ணீர் அல்லாத வேறொரு தண்ணீரை உனக்குக் கொடுத்திருப்பேன்'' என்றார் 179. அவள், ''மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திர மில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே'' என்றாள். இப்படியாக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொண் டிருந்தார், இப்பொழுது நானும் அதையே செய்து கொண்டிருக் கிறேன், உங்கள் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருக்கிறேன். 180. அவர், ''தாகத்துக்குத் தா'' என்றார். அவளுடைய தொல்லை என்னவென்று அவர் அறியும் வரைக்கும் உரையாடல் நடந்தது. அது என்ன என்று உங்களில் எத்தனைப்பேர் அறிவீர்கள்? அவள் விபசார ஜீவியம் செய்து கொண்டிருந்தான். ஆகவே அவர், ''ஸ்திரீயே, நீ போய் உன் புருஷனை இங்கே கொண்டு வா,'' என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை,'' என்றார். அவர், ''அது உண்மை . ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல' என்றார்.  181. அந்த ஸ்திரீ அவள் வாழ்ந்து கொண்டிருந்த அந்நிலையில் (அவளை நாம் பெயர் கெட்ட ஸ்திரீ, வேசி என்று அழைத்திருப் போம்), வேதத்தைக் குறித்து அவள் அறிந்திருந்ததற்கு செவி கொடுத்தாள். அவள் போதகர்களைப் போல் அவரை ''பெயல்செபூல், குறி சொல்பவன், பிசாசு'' என்றழைக்கவில்லை, குறி சொல்லுதல் பிசாசினால் உண்டானது என்று எவருமே அறிவர். எனவே குறி சொல்பவன் யார்? அது தாறுமாறாக்கப்பட்ட ஒன்று.  182. பிசாசுக்கு எதையுமே சிருஷ்டிக்க முடியாது. அவனால் சிருஷ்டிக்க முடிந்தால், தனக்கென்று ஒரு உலகத்தையே சிருஷ்டித்திருப்பான். ஆனால் அவனால் தேவன் சிருஷ்டித்ததை தாறுமாறாக்க முடியும். உங்களுக்கு விளங்குகிறதா? ஆண்களும் பெண்களும் கலந்துள்ள இக்கூட்டத்தில் இதை கூறுவது நல்லதல்ல. அதாவது ஒருவன் ஒருத்தியை மணந்து அவளுடன் மனைவியாக வாழ்ந்தால், படுக்கை கறைபடுவதில்லை. ஆனால் அதே செயலை அவன் வேறொருத்தியுடன் புரியும் போது, அவன் தவறு செய்கிறான். பாருங்கள், அது சரியான செயலை தாறுமாறாக்குதல். நான் கூறுவது விளங்குகிறதா? அது உண்மையான ஒன்று தாறுமாறாக்குதல். சாத்தான் தாறுமாறாக்குகிறான். அவ்வாறே குறி சொல்பவனும் தாறுமாறாக்கப்பட்ட ஞானதிருஷ்டிக்காரன் - அவன் பிசாசின் ஆதிக்கத்தில் நுழைந்து தாறுமாறாக்கப்பட்டவன்.  183. பிறகு கவனியுங்கள்..... அவள் அவரை அவ்வாறு அழைக்கவில்லை. அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண் கிறேன்'' என்றாள். அவள் அப்படி சொன்னாள் என்று எத்தனை பேருக்கத் தெரியும்? போதகர்கள் கொண்டிருந்த கருத்தைக் காட்டிலும் அது முற்றிலும் வித்தியாசமாயிருந்தது. அவள், "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்'' என்றாள். இப்பொழுது கவனியுங்கள், கேளுங்கள்! “மேசியா வரும்போது இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார் என்று சமாரியராகிய நாங்கள் கற்பிக்கப் பட்டு, அதை அறிந்திருக்கிறோம்''. அப்படி யானால் அது மேசியாவின் அடையாளமா? அப்படித்தானா? ''மேசியா வரும் போது இவைகளைச் செய்வார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் நீர் யார்?" இயேசு, “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் ஊருக்குள்ளே ஓடி ஜனங்களை நோக்கி, ''நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாவல்லவா?'' என்றாள். ஆனால் அவர் அதை புறஜாதிகளிடம் ஒருபோதும் செய்ய வில்லை. அவர் அதை புறஜாதிகளுக்கு வாக்குத்தத்தம் செய்திருக் கிறாரா? யூதர்களும் புறஜாதிகளும் பெற்றது போல் நமக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது - மேசியாவை எதிர் நோக்கும் பயிற்சி.  184. இயேசு, 'லோத்தின் நாட்களில், சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்'' என்றார். இப்பொழுது கவனியுங்கள்; சோதோமின் நாட்களில் லோத்துடன் கூட இருந்த நுண்ணறிவு படைத்தவர்களின் மத்தியில் எழுப்புதல் உண்டானது. ஒரு நவீன பில்லி கிரகாம் அங்கு சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களைக் குருடாக்கினார். ஆனால் ஆபிராகமுடன் கூட இருந்த தெரிந்து கொள்ளப்பட்ட சபையை; உலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளியே அழைக்கப்பட்ட பெந்தெகொஸ்தே அனுபவம் கொண்ட சபையை கவனியுங்கள்.  185. இப்பொழுது, மெதோடிஸ்டு சபையில் பெந்தெகொஸ்தே அனுபவம் கொண்டவர் உள்ளனர். பாப்டிஸ்டு சபையிலும் அனுபவம் கொண்டவர் உள்ளனர். பெந்தெகொஸ்தே என்பது ஒரு ஸ்தாபனமல்ல. அது ஒரு அனுபவம். அதை பெற விரும்பும் எவரும் பெற்றுக் கொள்ளலாம். பெந்தெகொஸ்தே ஸ்தாபனத் துக்கு ..... பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்கள் ஒன்றுமில்லை. கத்தோலிக்கர் அதை பெற்றுக் கொள்ளலாம். உங்கள் இருதயத்தில் நீங்கள் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை பெற்றுள்ள தால் நீங்கள் பெந்தெகொஸ்தேயினராக ஆகின்றீர்கள்.  186. ஆபிரகாம் வெளியே அழைக்கப்பட்டவன், ஆபிரகாமுடன் உட்கார்ந்திருந்த தூதன், தூதன் போன பிறகு, அவன் அவரை கர்த்தர் - ஏலோகிம் - என்றழைத்தான். ஏலோகிம் மகத்தான் யேகோவா தேவன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக? தேவனாகிய கர்த்தர்..... அவர் தம்முடைய முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பி (அவர் ஆபிரகாமிடம் என்ன சொன்னார் என்று கவனியுங்கள் - அவர் ஒரு அந்நியர், அதற்கு முன்பு அவர் அங்கு சென்றதில்லை). அவர், ''ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார். அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள் என்றும், அவளுடைய பெயர் சாராள் என்றும் அவருக்கு எப்படி தெரியும்? 187. ஆபிரகாம், தன் மனைவி அவருக்குப் பின்புறத்திலுள்ள கூடாரத்தில் இருந்ததாக அவரிடம் கூறினதாக வேதம் கூறுகிறது. அவர், 'ஆபிராகமே, உற்பவக் காலத் திட்டத்தில் நான் உன்னிடத்தில் வருவேன்; இந்த பிள்ளையை உனக்கு நான் வாக்களித்தேன், அதை உனக்கு நான் தரப்போகிறேன்'' என்றார். சாராள் (சத்தமாக அல்ல) உள்ளத்தில் நகைத்தாள். தூதன் தன் முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பி, "சாராள் ஏன் நகைத்தாள்?'' என்றார். அதை பார்த்தீர்களா? முடிவு காலத்துக்கு சற்று முன்பு புறஜாதிகளின் மத்தியில் அது நிகழுமென்று இயேசு கூறினார். மேசியா அப்பொழுது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் கீழே இறங்கி வருவார்.  188. மேசியா யோர்தானில் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டபோது, அவர் முதலாவதாக செய்தது என்ன? அவர் என்ன செய்தார்? அவர் பிணியாளிகளை சுகப்படுத்தினார். அவர்களை விட்டு விலகிச் செல்வதற்கு முன்பு அவர் செய்த கடைசி அடையாளம் என்ன? இங்குள்ள அந்த அடையாளம். பெந்தெகொஸ்தே எழுப்புதல் எதைக் கொண்டு வந்தது? பிணியாளிகள் சுகப்படுதல், அற்புதங்கள், அடையாளங்கள். கடைசியாக நிகழ்வது என்ன? இதோ இங்குள்ளது.  189. அங்கு வியாதியாயிருந்து ஜெப அட்டை இல்லாதவர் எத்தனை பேர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். விசுவாசமா யிருங்கள். 190. யாரோ ஒருவர், ''சகோ. பிரன்ஹாமே, அதைக் குறித்து என்ன?'' என்றார். அந்த பரிசுத்த ஆவி; வாக்குத்தத்தம் பண்ணின அவர் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற தவறமாட்டார்.  191. ஜெப அட்டைகள் இல்லாதவர்களே, உங்களிடம் என் முதுகை திருப்பிக் கொள்கிறேன். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருங்கள். தேவன் தேவனாயிருந்தால்; அவருடைய பதில் உண்மையாயிருக்குமானால்; இது அவருடைய பிரசன்னமாகுதல் அருகாமையிலுள்ளது என்பதைக் காண்பிக்கும் அடையாளம் என்று இந்த வாரம் உங்களிடம் உணமையைக் கூறினேன். 192. நாகரீகமுள்ள எந்த சிந்தையும், நாம் ஏதோ ஒன்றின் முடிவில் இருக்கிறோம் என்பதை அறிந்துள்ளது. நாகரீகம் இன்னும் அதிக காலம் நீடிக்காது- அது தள்ளாடிக் கொண்டிருக் கிறது. அது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது? அது முன்பே நடந்திருக்க வேண்டும். நோவாவின் நாட்களில் நடந்தது போல - நீடிய பொறுமை. அது காலம் கடந்துவிட்டது, ஆனால் தெரிந்தகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம் - காலதாமதமாகின்றது - தேவன் தமது சபை ஒழுங்குக்கு வர காத்துக் கொண்டிருக்கிறார். அவர் உனக்காகவும் எனக்காகவும் காத்திருக்கிறார். அவர் ஆசீர்வாதங்களை அருளுவாராக, நீங்கள் ஜெபித்துக் கொண்டிருங்கள்.  193. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட போது... அங்குள்ள ஸ்திரீகளாகிய உங்களில் சிலர்.... அது வேதாகமத்தைப் போல் இருக்கட்டும்... இப்பொழுது விசுவாசிக்கும் ஸ்திரீகளாகிய உங்களில் சிலர்; தேவனை விசுவாசிக்க உங்களுக்குப் போதிய விசுவாசம் உண்டு என்று எண்ணுபவர்கள், தேவன் கூறியுள்ள ஒவ்வொன்றும் உண்மை யென்று விசுவாசி யுங்கள். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவர் திரும்பிப் பார்த்து, ''என்னை தொட்டது யார்? என்னை தொட்டது யார்?'' என்றார். 194. அவர்கள் எல்லோரும் அதை மறுத்தனர். பேதுரு , ''எல்லோருமே உம்மைத் தொடுகின்றனர். பின்னை ஏன் அப்படி சொல்லுகிறீர்?'' என்று அவரைக் கடிந்து கொண்டான். அவர், ''நான் பலவீனமாகிவிட்டதை உணருகிறேன்'', என்றார் (அது தான் சரியான மொழி பெயர்ப்பு). ''என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது வல்லமை என்பது பெலன்''. எத்தனை பேர் அதை அறிந்திருக்கிறீர்கள். 'என்னிலிருந்து வல்லமை புறப்பட்டு சென்றது." அவர் கூட்டத்தை சுற்றும் முற்றும் பார்த்து அந்த ஸ்திரீயைக் கண்டு பிடித்தார். அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுவிட்டதாக அவளிடம் கூறினார். ஏனெனில் அவளுடைய விசுவாசம் அவளை குணமாக்கினது. அது சரியா? நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக அவர் இப்பொழுது இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. புதிதாக வந்துள்ளவர்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 195. ஞாபகம் கொள்ளுங்கள், சுகமடைதல் .... அவர் எனக்களித் துள்ள இந்த 'சூட்' டைப் போட்டுக் கொண்டு இங்கு நின்று கொண்டிருப்பாரானால், அவரால் உங்களை குணமாக்க முடியாது. நீங்கள் இங்கு மேடைக்கு வந்து, 'ஆண்டவரே என்னைசுகப்படுத்து வீரா?'' என்று கேட்டால், அவர் உங்களிடம் என்ன சொல்வார் தெரியுமா? ''நான் ஏற்கனவே அதை செய்து விட்டேன். உங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நான் காயப்பட்டேன். என் தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்'' என்று. இரட்சிப்பும் சுகம் பெறுதலும் முடிந்து விட்ட கிரியைகள். உங்களுடைய விசுவாசம் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  196. அவர் மேசியா என்று நிரூபிப்பதற்கு ஏதாவதொன்றை செய்வார். இவை நான் மேசியா என்று நிரூபிப்பதில்லை. நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி. தேவன் என்னை எவ்வளவாக அபிஷேகம் பண்ணினாலும் அவர் உங்களையும் அபிஷேகம் பண்ணவேண்டும். என்னைக் கொண்டு மாத்திரம் அது கிரியை செய்ய முடியாது. அது கிரியை செய்ய வேண்டு மானால் நீங்களும் அதில் ஈடுபடவேண்டும். பரிசுத்த ஆவி எவ்வளவாக என் மேல் வந்தாலும், அது உங்கள் மேலும் வரவேண்டும். அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக இருப்பாரானால், அவர் நேற்றும் இனறும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறியுள்ளதால், அவர் அன்று போலவே இன்றும் கிரியை செய்வார். அவர் இங்கு நமக்குள் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  197. இப்பொழுது, எல்லோரும் இருக்கைகளில் அமர்ந் திருங்கள். பயபக்தியோடு ஜெபித்துக் கொண்டிருங்கள். தேவனாகிய கர்த்தர்தாமே இதை அருளுவாராக... கர்த்தாவே, தயவு கூர்ந்து இந்த அருமையான மக்கள், கர்த்தாவே நான் இங்கு வந்துள்ள நோக்கத்தை நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் அதைக் காணும்படி செய்யும். கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. கொடூரமாகக் காணப்படும் இந்த செய்திகள்.... அவர்களைத் தட்டி எழுப்பட்டும். நான் புத்திசாலி என்று காண்பிப்பதற்காக அல்ல. என்னில் ஒன்றுமில்லை. நீர் அதை அபிஷேகித்து அவ்வாறு கூறினதால் மாத்திரமே.  198. கர்த்தாவே, அதை நிரூபியும். உமக்காக நான் பேசினேன், கர்த்தாவே, எனக்காக நீர் பேசி, என் வார்த்தைகள் உண்மை யென்று அறிவிப்பீராக. ஏனெனில் அவை உம்மிடத்திலிருந்து வந்தன. இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.  199. உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நாளை இழந்து போகாதீர்கள். இந்த ஜெபவரிசையிலுள்ள எத்தனை பேர் எனக்கு அந்நியர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் எல்லலோருமே அந்நியர்கள். அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜீன் கோட் (Gene Goad). அங்குள்ள பாட்டைலர் இவர்களைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த இவர்களை மாத்திரமே நான் காண்கிறேன்; பின்னால் நின்று கொண்டிருக்கும் என் மகனும் கூட. 200. சிகப்பு தொப்பி அணிந்து கண்களை தேய்த்துக் கொண்டு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த ஸ்திரீ: மண்டை சளியினால் உண்டாகும் தலைவலியை நீக்க வேண்டுமென்று இயேசுவிடம் நீ ஏறெடுத்த ஜெபத்தை அவர் கேட்டார் என்று விசுவாசிக்கிறாயா? அவர் உனக்கு செவி கொடுத்தார் என்று விசுவாசிக்கிறாயா? அதற்காக நீ ஜெபித்துக் கொண்டிருந்தாய், இல்லையா? அது உண்மையானால் எழுந்து நில். அது உண்மை யானால் உன் கையையுயர்த்து. உன்னை எனக்கும், எனக்கு உன்னையும் தெரியாதிருந்தால், உன் மற்ற கையையுயர்த்து - இரு கைகளையும். என் எழுப்புதல் கூட்டங்களுக்கு முன்பு வந்திருக்கிறாயா? நான் கூறுவது என்னவெனில், எனக்கு உன்னை பரிச்சயமில்லை. இல்லை. சரி. 201. சரி, இப்பொழுது, அவர்கள் காணவேண்டியிருந்தது. நீ சுகமடைந்தவளாய் வீடு செல். உங்களை ஒன்று கேட்க விரும்பு கிறேன், அவள் எதை தொட்டாள்? இதோ என் கை. அவளை நான் கண்டதாக எனக்கு ஞாபகமில்லை.... அவள் என் கூட்டங்களுக்கு முன்பு வந்திருக்கிறாள். நீங்கள், 'மேலே தாழ்வாரத்தில் அல்லது கீழே உள்ள யாராவது முன்பு உங்கள் கூட்டங்களுக்கு வந்திருக்கக் கூடும்'' எனலாம். ஆனால் நீங்கள் யாரென்று அறிய எனக்கு வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, நீங்கள் முன்பு கூட்டங்களுக்கு வந்திருந்தீர்கள் என்பதே. அதோ அவள்.... அவள் ஏதோ ஒன்றைத் தொட்டாள். அவள் எதை... சற்று முன்பு அந்த அக்கினி ஸ்தம்பத்தைப் குறித்து கூறினேன். நீங்கள் காண்கிறீர் களா... எத்தனை பேரிடம் அதன் புகைப்படம் உள்ளது? அவர்கள் கூட்டத்தில் அதை வைத்துள்ளனர். அது அக்கினி ஸ்தம்பத்தைப் போல் காணப்படுகிறது. இல்லையா? அதன் ஜீவன்? அது எதை விளைவிக்கிறது? நான் அல்ல, அது! அது எதை விளைவிக்கிறது? அது தேவனுடைய குமாரனுக்குள் இருந்த போது செய்த அதே கிரியைகளை. இப்பொழுது அது உண்மையான தேவனுடைய குமாரனுடைய கிருபையினால், புத்திர சுவீகாரரான தேவனுடைய குமாரர் குமாரத்திகளுக்குள் இருக்கிறது.  202. அங்குள்ள ஐயா, அந்த இருதய நோய் நீங்க விரும்புகிறீரா? அங்கு நின்று கொண்டிருப்பவரே, தேவன் உங்களை குணமாக்கு வார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் பார்த்து வியந்து கொண்டிருந் தீர்கள். அப்பொழுது ஒரு வினோதமான உணர்ச்சி உங்களுக்கு உண்டானது. அது உண்மை . உங்களை எனக்குத் தெரியாது, இல்லையா? என்னை உங்களுக்குத் தெரியாது. உங்களை எனக்குத் தெரியாது. அது உண்மையானால், உங்கள் கையையு யர்த்துங்கள். உங்கள் இருதய நோய் நீங்கி விட்டதென்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கையை ஆட்டுங்கள். சரி, அது நீங்கி விட்டது. பாருங்கள்? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  203. இங்கு ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த ஸ்திரீயின் மேல் அந்த ஒளியை உங்களால் காணமுடிய வில்லையா? அவளுத்து பித்தப்பையில் கோளாறு உள்ளது. அவள் அதைத் தவறவிடப்போகின்றாள். தேவனே, உதவி செய்யும். குமாரி ஸ்மால். தேவன் அந்த பித்தப்பை கோளாறை நீக்கி சுகப்படுத் துவார் என்று விசுவாசிக்கிறீரா? அப்படியானால் எழுந்து நில். நீ நினைத்திருந்ததைக் காட்டிலும் உனக்கு அதிக விசுவாசம் உள்ளது. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது, அது தேவனுடைய கிருபை. நாம் அந்நியர்களாயிருந்தால், உன் கைகளை அப்படி ஆட்டு. பார்த்தீர்களா? உன்னை எனக்குத் தெரியாது. ஆனால் அவர் உன்னிடம் கூறினது உண்மையா? அப்படியானால் உன்கையை யுயர்த்து. சரி, விசுவாசித்து, சுகமடைந்தவளாய் வீடு செல் - நீ விசுவாசிப்பாயானால். 204. வயிற்றுக் கோளாறைக் கொண்டு இங்கு அமர்ந்திருக்கும் ஸ்திரீ... வயிற்றில். ஆம், எஃப்பியைக் குறித்து தான் நான் கூறுகிறேன். எஃப்பி. எழுந்து நில். அதுதான் உன் கோளாறா? உன்னை எனக்குத் தெரியாது. அது உண்மையானால், உன் கையை யுயர்த்து. உன்னை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. பரலோகத் திலுள்ள தேவன் அதை அறிவார். வீடு செல், அது தீர்ந்து விட்டது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 205. நீங்கள் உங்கள் பாவங்களில் மரித்தால், அது தேவனுடைய தவறல்ல. நீங்கள் ஒருக்கால் சபைக்கு விசுவாசமுள்ளவர்களாய் இருக்கலாம். ஆனால் அவிசுவாசி பாவியே. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சரி. இப்பொழுது, இங்குள்ள மக்கள் - இது கைகளை வைத்து வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்க வேண்டிய ஜெப வரிசை. நீங்கள் என்ன நேர்ந்தாலும் விசுவாசிக்கப் போகிறீர்களா? அது ஜெப அட்டை வைத்திராதவர் - அது சிந்தனைகளைப் பகுத்தறிந்த வரிசை, ஜெப அட்டை இல்லாதவர்கள். இப்பொழுது மற்றவர்கள் விசுவாசிக்கத் துவங்குங்கள். சுற்றும் முற்றும் நடக்காதீர்கள். பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆவி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆவி. அது உங்களுக்குத் தெரியும்? அப்படி இல்லையென்றால் நீங்கள் மரித்திருப்பீர்கள். எனவே உங்கள் ஆவியைக் குறித்துதான் நான் பேசுகிறேன். உங்களைக் குறித்தல்ல. அது உங்கள் ஆவி... இங்கு வாருங்கள்.  206. ஸ்திரீயே இங்கே வா. நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். நமக்கு ஒருவரையொருவர் தெரியாது. நாம் அந்நியரென்றும், நாம் முன்பு சந்தித்ததில்லை என்றும் மேலே தாழ்வாரத்திலுள்ளவர் அது சரியென்று புரிந்து கொள்ளவும் உன் கரங்களை உயர்த்துவாயா? இதோ ஒரு அழகான காட்சி. பரி. யோவான் 4ம் அதிகாரம் - ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும் தங்கள் ஜீவியத்திலே முதன் முறையாக சந்திக்கின்றனர். இது கிறிஸ்துவின் ஆவியானால், அவர் கிறிஸ்து செய்த அதே கிரியைகளைச் செய்வார். தயவு செய்து ஒருவரும் அசையவேண்டாம். இப்பொழுது, நீங்கள் மற்றவரை துக்கப்படுத்து ...... பாருங்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் என் கட்டுக்குள் இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உண்மை யாகவே அமைதியாகவும் பயபக்தியாயும் இருங்கள். சரி.  207. தேவனாகிய கர்த்தர் உன்னைக் குறித்து ஏதாவதொன்றை கூறுவாரானால்..... நான் இங்கே வந்து.... நீ ஒருவேளை சுகவீனமாயிருக்கலாம், அல்லது அவ்வாறின்றி..... நீங்கள் வியாதிப்பட்டிருந்து, நான் இங்கே உன் மீது என் கைகளை வைத்து, ''ஸ்திரீயே, நீ சுகமடைவாய்; என்று கூறுவேனானால், நீ அதை விசுவாசிக்கக் கூடும். ஏனெனில், அதுதான் உண்மை . ஆனால் பரிசுத்த ஆவியானவர் இங்கே நின்று ... இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த சூட் (suit) அணிந்து - நின்று கொண்டிருந்து, நீ அவரிடம், "என்னை சுகமாக்கும், என்னை சுகமாக்கும், கர்த்தாவே,'' என்று கூறுவாயானால், அவர், ''நான் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்.'' என்றே கூறுவார். அவர் முன்பு அங்கே கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீக்குச் செய்தது போல இன்று தாம் யார் என்று நீ அறியும்படியாக அவர் செய்தால் ... அவள் எவ்விதமாய் அவரை அறிந்து கொள்ளும்படி அவர் செய்தார்? அவள் ஜீவியத்திலிருந்து ஒன்றை அவளுக்கு கூறியதின் மூலம். கூட்டத்திலுள்ளவர்களே, இது சரியா? புதியதாய் வந்துள்ளோர்? அவள் ஜீவியத்திலிருந்து ஒன்றை அவர் அவளிடம் கூறினார். இப்பொழுது, அவர் சீமோன் பேதுருவிற்கு அல்லது வேதத்திலுள்ள மற்றவர்க்கு செய்தது போல, அவருடைய வழியிலே செய்தது போல, இன்று உன் ஜீவியத்திலுள்ள ஏதோ ஒன்றை அவர் கூறுவாரானால், அது உனக்கு அதிக விசுவாசத்தை யளிக்கும். அதை விசுவாசிக்கும்படி உங்கள் ஒவ்வொருக்கும் அது விசுவாசித்தை அளிக்கும்?  208. இப்பொழுது, இங்கே, ஒரு கறுப்புத் திரையின் பின்னாலோ அல்லது பிசாசின்... பின்னாலோ மறைந்துகொண்டு அல்ல. ஆனால் இங்கே மேடையின் மீது எல்லாரும் ... வேதத்தின் வார்த்தையின் படியே , அது வேதசாஸ்திரத்திற்கு குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் வேத வசனத்தின்படியே உள்ளது. பாருங்கள்? நான் உனக்கு உதவ முடிந்து, அதைச் செய்யாவிடில், நான் ஒரு போலி. நான் உனக்கு உதவ முடிந்து அதைக் செய்யாவிடில் இந்த வேதத்தின் பக்கத்தில் நிற்கவும் நான் தகுதியுள்ளவன் அல்ல என்னால் உங்களுக்கு உதவி செய்ய முனைந்து என்னால் முடிய விட்டால். என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. என்னால் செய்ய முடிகின்ற ஒரேயொரு காரியமானது நீங்கள் வியாதியுள்ள வர்களாயிருந்தால் உங்களை சுகமாக்க கிறிஸ்து இங்கே இருக்கிறார் என்று நீங்கள் உணரும்படிக்குச் செய்யத்தான் முடியும். நீங்கள் வியாதியாயிருக்கிறீர்கள். நீங்கள் பெண்களுக்கான கோளாறினால் அவதியுறுகிறீர்கள்; அது ஸ்திரீகளுக்கு உள்ள ஒரு தொந்தரவு. அது சரி. அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நான் யூகித்துக் கூறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு நிமிடம் பொறுங்கள். உங்கள் இருதயத்தின் மேல் ஒன்றை வையுங்கள். தேவன் உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டு மென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்காக உங்கள் இருதயத்தில் ஜெபம் ஏறெடுங்கள். ஆமாம், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒரு தேவையைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறீர்கள். அது உங்கள் கணவரைக் குறித்தது. உங்கள் கணவரைக் குறித்தது தான். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை தேவனால் என்னிடம் கூற முடியுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருக்கு மூளையில் ஏதோ கோளாறு உள்ளது. மூளையில் உள்ள நரம்பு சற்று கடினப்பட்டுள்ளது. அது உண்மை . அது சரியே. நீங்கள் யார் என்பது தேவன் எனக்கு கூறுவார், அது உங்களுக்கு விசுவாசத்தை பெருகச் செய்யுமா? உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கிறீர்களா? நான்சி கிலெஸ்ப்பி (Nancy Gillespie), வீட்டிற்கு செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் கணவரையும் சுகமாக்கி விட்டார், உங்களை சுகமாக்குகிறார். அந்த கைக்குட்டையை அவரிடம் கொண்டு செல்லுங்கள். அது உண்மை , அப்படித்தானே? சரி. உங்கள் வீடு செல்லும் பாதையில் செல்லுங்கள். 209. இப்பொழுது, நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள்; சந்தேகப்படாதீர்கள். நீங்கள் இந்த மக்களுக்காக என்னுடன் சேர்ந்து ஜெபிப்பீர் களானால்; யாரோ ஒருவருடைய அம்மாவிற்காக, யாரோ ஒருவருடைய அப்பாவிற்காக, யாரோ ஒருவருடைய இனிய வருக்காக, யாரோ ஒருவருடைய கணவருக்காக; ஜெபியுங்கள்; இப்பொழுது இங்குள்ள இந்த மகத்தான சபையிடம் நான் கேட்டுக் கொள்ளப் போவது என்னவென்றால், தயவு செய்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்காதீர்கள். அப்படி செய்வதின் மூலம் நீங்கள் கூட்டத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்படியே தரித்திருந்து ஜெபியுங்கள். நீங்கள் அப்படியே பயபக்தியாயிருந் தால் இன்னும் பத்து நிமிடங்களில் ஆராதனையை முடித்து விடலாம். வாருங்கள் அம்மாளே. நான் உங்களுக்கு ஒரு வார்த்தையும் கூறாமல் ஜெபத்தை மாத்திரம் ஏறெடுத்தால், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? கர்த்தராகிய இயேசுவே நீர் தாமே இவர்களை சுகப்படுத்தும் படிக்கு நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். என் சகோதரனே, வாருங்கள். உங்கள் மழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். எங்கள் பரலோகப்பிதாவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவரை சுகப்படுத்தும். ஆமென். என் சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (அந்த சகோதரன், சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசி) ஓ அது .... அது எங்களுக்கு எந்தவித வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. இப்பொழுது அது சரியாகிவிட்டது. உங்களுக்கு இருக்கின்ற கோளாறு என்ன என்று நானறிவேன், ஆனால் உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. அது .... நான் அதை உங்களுக்கு கூறினால் அது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்குமா? இல்லையா. சரி. ஆனால், எப்படியாயினும், நீங்கள் அந்த இடத்தை விட்டு வந்த உடன் உங்கள் இருதயக் கோளாறு உங்களை விட்டு நீங்கி விட்டது. ''கர்த்தாவே உமக்கு நன்றி'' என்று களி கூர்ந்துச் செல்லுங்கள்.  210. வாருங்கள், ஐயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, நீர் தாமே இவரை சுகப்படுத்த வேண்டு மென்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது விசுவாசியுங்கள். சகோதரியே, விசுவாசமாயிருங்கள், வாருங்கள்... இது... இங்கே பாருங்கள், இப்பொழுது உங்களுக்காக ஏறக்குறைய மூன்றாயிரம் மக்கள் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் நாமத்தில் இவள் சுகமாக்கப்படட்டும். பிதாவே, இதை அருளும். ஐயா, வாருங்கள், இப்பொழுது நீங்கள் விசுவாசத்தை கொண்டிருக்கவில்லையெனில் ஒரு நாளிலே அந்த மூட்டு வீக்கம் உங்களை திரும்பவும் பீடித்துக் கொள்ளும். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் புறப்பட்டுச் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாகுங்கள். வாருங்கள், சகோதரியே, பிதாவாகிய தேவனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியை சுகமாக்கும். இப்பொழுது விசுவாசித்தக் கொண்டே வாருங்கள் ஒவ்வொருவரும் விசுவாசித்து ஜெபியுங்கள். பரலோகப் பிதாவே, இவளை நீர் சுகமாக்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். வாருங்கள். இப்பொழுது, சகோதரனே, ஒவ்வொரு வருக்கும் நாங்கள் தரிசனத்தைக் கொண்டிருந்தால், அது .... நீங்கள்.... என்னை பிரசங்க மேடையிலிருந்து தூக்கித் தான் செல்ல வேண்டும். புரிகின்றதா? நான் சரிந்து விடுவேன். ஆனால் நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள், சென்று இரவு ஆகாரத்தை சாப்பிடுங்கள். அது அருமையாக சுவைக்கும். உங்கள் வயிற்றுக் கோளாறு உங்களை விட்டு நீங்கிற்று. சரியா? சென்று சுகமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 211. வாருங்கள், சகோதரி. அதை நான் ஒரு காரணத்திற்காகச் செய்கிறேன், அப்படியே விழுந்து விடுவேன், நண்பர்களே, ஏனெனில் தரிசனங்கள்.... ''என்னிலிருந்து வல்லமை புறப் பட்டது,'' என்று இயேசு கூறினதை எத்தனைப் பேர் அறிவீர்கள்? நான் இப்பொழுது நலமாக இருக்கிறேன், ஆனால் மிக மிக பலவீனமாக இருக்கிறேன். ஓ பிதாவே , எங்கள் சகோதரியை நீர் சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். இதை அருளும். வாருங்கள் அருமை சகோதரியே. சந்தேகம் கொள்ளாதீர். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து வாருங்கள். ஓ, கர்த்தாவே, கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியை சுகமாக்கும். இவளுக்கு ஜெயத்தை அளித்தருளும் கர்த்தாவே. என் சகோதரியே. உங்கள் முதுகு பிரச்சனை உங்களை விட்டகன்றது, துதித்துக் கொண்டு உங்கள் வழியில் செல்லுங்கள், இப்பொழுது...?... 212. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்ன? என்ன? கவனியுங்கள். நான் உங்களை கேட்க விரும்புகிறேன். நண்பர்களே கவனியுங்கள். ஜனங்கள் இங்கே வருகையில், ''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று வேதாகமம் கூறுகின்றது. இவர்களிடம் கூறுவதை விட இது அதிகமானது. நீங்கள் அதை விசுவாசிக்கறீர்களா? நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஐயா, இங்கே கவனியுங்கள். நான் அவருடைய ஊழியக்கார னென்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? நான் சற்று முன் நிறுத்தின அந்த ஸ்திரீ இருக்கிறார்கள்; நீங்கள் ஒரு மனிதன். உங்களுடைய வியாதி என்னவென்றும் தேவன் எனக்கு கூறமுடியுமென்றும் உங்களை சுகமாக்க முடியுமென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ... ஆம், ஐயா. உங்களுடைய வலுவிழந்த சுரப்பிகள். ஆம், ஐயா. ஏனென்றால் உங்கள் வலு விழந்த தன்மை உங்களை தளர்ச்சிக்குள்ளாக்குகிறது, அது உங்களை நிலைகுலையச் செய்கிறது. அது முற்றிலும் சரியே. நீங்கள் விசுவாசித் தால் உங்கள் மனைவியும் கூட சுகமாக்கப்படுவார்க ளென்று நான் விசுவாசிக்கிறேன். அது சரி. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால், அப்பொழுது உங்கள் மனைவியும் சுகமாவார்கள் (சகோதரன் 'அவளும் வியாதியாயிருக்கிறாள்'' என்று கூறுகிறார் - ஆசி) ஆம், நரம்புத்தளர்ச்சி, நிலைகுலைந்து போதல், பலவீனம் மற்றும் பிற காரியங்கள். அவர்கள் சுகமாவார்களென்று உங்கள் முழு இருதயத்தோடு இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் திரும்பிச் சென்று 'அருமை கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி'' என்று உங்கள் பாதையில் கூறிக்கொண்டே செல்லுங்கள், அவர்களும் கூட சொஸ்தமாவார்கள். கர்த்தராகிய இயேசுவே, நீர் இதற்கு உதவவேண்டு மென்று நான் ஜெபிக்கிறேன், ஓ கர்த்தாவே, தேவனுடைய மகிமை தாமே இவர் மீது வந்து இவர்தாமே சுகமாகும் படிக்குச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இப்பொழுது, திரு. டாப்ஸ் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்துச் செல்லுங்கள், சுகமாகுங்கள்.  213. சரி. ஐயா, வாருங்கள், ஐயா. பரலோகப் பிதாவே நீர் தாம் எங்கள் சகோதரனை சுகப்படுத்தி அவரை நலமாக ஆக்கும்படிக்குச் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். வாரும் அருமை சகோதரியே, இப்பொழுது உங்கள் முழு இருதயத்துடன் அவரை விசுவாசியுங்கள். ஓ தேவனே, எங்கள் பிதாவே, இவளை நீர் சுகமாக்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். வாரும் சகோதரனே, இந்த சிறு பிள்ளையை கொண்டு வாரும். இப்பொழுது சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் சிலுவையின் கீழ் வந்ததைப் போலவே இவனையும் அப்படியே கொண்டு வாருங்கள். கர்த்தாவே இயேசுவின் நாமத்தில் இவர்களை நான் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். வாரும் சகோதரியே, உங்கள் முழு இருதயத்தோடே விசுவாசித்து வாருங்கள். பிதாவே நீர் இவளை சுகமாக்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். இப்பொழுது விசுவாசித்து பயபக்தியுடன் இருங்கள். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இவள் சுகமாக்கப்படுவாளாக, கர்த்தாவே. ஆமென். உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்து வாருங்கள் சகோதரியே. இவள் தன் பார்வையை திரும்பப் பெற்று சுகமாவாள் என்று விசுவாசியுங்கள். ஓ, கர்த்தாவே, நீர்தாமே இவளை சுகமாக்க வேண்டு மென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.  214. அன்றொரு இரவு, சுமார் பதினைந்து , பதினாறு வயது சிறிய பையனுக்காக ஜெபித்தேன், மகத்தான விசுவாத்துடன் இருந்த அந்த சிறுபையன். நான் அவனை நோக்கிப் பார்த்தேன்; ''மகனே, நீ அதை அறிவாய்'' என்றேன். ஆகவே அவன் வெளியே சென்றான், கீழே நடந்தான், பிறவிக் குருடனான அந்த சிறு பையன் பார்வை யடைந்து 'ஓ, சகோதரன் பிரன்ஹாம் என்னால் காண முடிகின்றது'' என்று கூச்சலிட்டான். தலை கனத்து வீங்கியிருந்த ஒரு குழந்தை, ஒரு இரவு என்னைக் கடந்த சென்ற உடனே தலை சுருங்கி சுகமடைந்தது. காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். பாருங்கள்? நீங்கள் கோழிக் குஞ்சுகள் அல்ல; நீங்கள் கழுகுகள். 215. வாருங்கள். இயேசுவின் நாமத்தில், கர்த்தாவே, தேவனுடைய மகிமைக்கென இவள் சொஸ்தமாக்கப்படட்டும், ஆமேன். விசுவாசித்து வாருங்கள், விசுவாசம் கொண்டிருங்கள். உங்களுக்கு தெரியும்.... நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள், நண்பர்களே? நான் மக்களை திட்டவில்லை, ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டு மென்று நான் விரும்புகிறேன்; நம்முடைய வாழ்க்கையில் அதிகப்படியான தொலைகாட்சி (TV) நிகழ்ச்சிகளை விரும்புகிறோம். நமக்கு பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. நமக்கு... உங்கள் பொழுது போவதற்காக தேவன் உங்களுக்கு காரியங்களை காண்பிப்பதில்லை. அவருடைய பிரசன்னதை நீங்கள் அடையாளங் கண்டு கொள்ள வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். அக்காரியங்கள் எல்லோருக்கும் சம்பவிக்கக் கூடும், ஆனால் அது ஏறக்குறைய உங்களை கொன்று விடும். ஓ , நான் வரிசையில் என்னால் செல்ல முடியவில்லை. அம்மாளே, இங்கே வாருங்கள். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அந்நியர். உங்களுக்குள் உள்ள கோளாறு என்ன என்று தேவன் எனக்கு கூறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது உங்களுக்கு உதவியாயிருக்குமா? இந்த பெண்ணிற்கு தேவன் கூறுவது உங்கள் எல்லாருக்குமே உதவியாயிருக்குமா? அது உங்கள் காதில் தான் உள்ளது . தேவன் உங்களை சுகப்படுத்து வாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது புற்றுநோயாக இருக்குமென்று பயப்படுகிறீர்கள். அது உங்கள் இடது பக்க காதில் இருக்கிறது. அது சரியா. நல்லது, அது இருந்தது, ஆனால் இப்பொழுது அது இல்லை. இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் யார் என்று தேவன் எனக்கு கூறுவாரானால், அது உங்களுக்கு உதவியாயிருக்குமா? சரி. ரூபி காண்ஸ்ட ன்ஸ், வீடு செல்லுங்கள், இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் சுகமாகுங்கள். பாருங்கள்? விசுவாசம் கொண்டிருங்கள்.  216. இப்பொழுது வாருங்கள். சந்தேகப்படாதீர். உங்கள் வியாதி என்னவென்பதை தேவனால் என்னிடம் கூறமுடியும், அது உங்களுக்கு உதவியாயிருக்குமென்று எண்ணுகிறீர்களா? அது நீரழிவு நோய், இருதயக்கோளாறு, செல்லுங்கள், சுகமாகுங்கள், தேவனை விசுவாசியுங்கள். ஆம், அது உங்களுக்கு வருகின்ற வயதுகடந்த ஒரு நிலை. இப்பொழுது விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். ஓ, கர்த்தவே, நீர் தாமே எங்கள் சகோதரனை சுகமாக்கும்படி ஜெபிக்கிறேன். அவரை நலமாகச் செய்யும். ஆமென். தேவனே இதை அருளும். வாருங்கள் அருமை சகோதரி . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இவள் சுகமாக்கப்படுவாளாக. ஆமென். தேவனுடைய ஆசீர்வாதங்களைக் கேளுங்கள், அது எப்படி தவறும்? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அப்படியே ஆகட்டும், கர்த்தாவே. ஆமென். வாரும், என் சகோதரனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சசகோதரன் சுகமாக்கப்படட்டும். ஆமென். வாரும், அருமை சகோதரனே. தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. தாயைக் கொண்டு வாரும். வாருங்கள் சகோதரியே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகமாக்கப்படுவீர்களாக. வாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரி சுகமாக்கப்படுவார்களாக, பிதாவே. ஆம், இப்பொழுது விசுவாசியுங்கள். அதே காரியம் அங்கே சம்பவிக்கும், நீங்கள் சந்தேகப்படாமலிருந்தால். 217. ஓ தேவனே, இந்த பரிதாபமான, அருமையான சகோதரனை ஆசீர்வதியும். பரலோகப் பிதாவே, நீர் தாமே இவரை சுகப்படுத்தி நலமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இவர் தாமே தன்னுடைய பார்வையை திரும்பப் பெற்று சுகமாக்கப்பட வேண்டு மென்று, இயேசுவின் நாமத்தில் நடந்தேறுவதாக. ஆமென். இப்பொழுது, விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர். என்னால் சுகமாக்க முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர்தான் சுகமாக்குபவர். சந்தேகப்படவேண்டாம். குருடனான பர்திமேயு போல இருங்கள்: உங்கள் தருணத்திற்காக காத்துக் கொண்டிருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?... இந்த சகோதரி சுகமாவார்களாக. சரி. அருமை சகோதரியே வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, எல்லாரும் உண்மையான… ஏதோ சம்பவித்துள்ளது. ஒரு நிமிடம். அங்கே உட்கார்ந்திருக்கின்ற அந்த ஆள், உனக்கு ஆஸ்துமா நோய் உள்ளது, ஐயா. சரி. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். ''அது அற்புதமானதல்லவா?'' என்று கூற திரும்பினீர்கள். நான் உங்களுக்கு வேறொரு காரியத்தை கூறுவேன்; வயிற்றுக் கோளாறால் வயிற்றின் மூன்றில் இரண்டு பங்கை அவர்கள் எடுத்து விட்டார்கள். அது சரிதானே? அது சரியென்றால் உங்கள் கரத்தை அசைவாட்டுங்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். உங்கள் விசுவாசம் உங்களை சுகப்படுத்தினது. களிகூர்ந்து வீடு செல்லுங்கள். ஓ, சந்தேகப்படாதீர்கள்; விசுவாசியுங்கள். 218. சரி, அம்மாளே. நீங்கள்..... ஒரு நிமிடம் பொறுங்கள். இப்பொழுது நீங்கள் உங்களுக்காக வரவில்லை. நீங்கள் வேறொருவருக்காக இங்கே இருக்கிறீர்கள். சரி. உங்கள் சகோதரன் இங்கே இல்லை. உங்கள் சகோதரன் இந்த மாநிலத்தில் கூட இல்லை. அவர் செயின்ட் லூயிஸில் இருக்கின்றார். அவர் மருத்துவ மனையில் உள்ளார். அவருக்கு இருதயக் கோளாறு உள்ளது, அவர் ஒரு போதகராகவும் இருந்துள்ளார். நான் உங்களிடம் வந்து உங்கள் மீது கைகளை வைத்தால் என்று நினைத்தீர்கள் - நான் எதைக் குறித்துப் பேசுகிறேனென்று எனக்குத் தெரியாமல் இருந்தது, இப்பொழுது தெரியும். ஆகவே திரும்பிச் செல்லுங்கள். அவர் இப்பொழுது சுகமாகப் போகின்றார்.....?... சரி. விசுவாசம் கொள்ளுங்கள். முன்னே செல்லுங்கள். கொல்லப்பட்ட தன்னுடைய மகளைக் குறித்து, இதே விதமாக நினைத்துக் கொண்டிருக்கின்ற வேறொரு ஸ்திரீ இங்கே இருக்கிறார்கள். திருமதி வெதர்மேன்- வாட்டர்மேன், அதுவே தான். திருமதி வாட்டர்மேன், இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். உங்கள் மகள் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டாள். சந்தேகப்படாதீர். தேவனை விசுவாசியுங்கள். 219. ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர் சுகமாவராக. ஆமென். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து வாருங்கள். ஓ கர்த்தராகிய தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித் தவரே, இந்த ஸ்திரீயின் சுகத்தை அருளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். இப்பொழுது விசுவாசியுங்கள். இப்பொழுது கவனியுங்கள், இது மருந்தாலான சுகமாக்கப்படுதல் அல்ல; ஆனால் பரலோக சுகமாக்குதல் என்ற ஒன்று உள்ளது. அதுசரி. நீங்கள் இயல்பான நலமான நிலைக்கு வருவீர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சபிக்கிறேன் ..... இந்த குழந்தைக்கு இதைச் செய்த அந்த பிசாசை நான் சபிக்கிறேன். மேலும் இந்த குழந்தையிலிருந்து சாபத்தை வெளியே எடுக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். இது நலமான குழந்தையாக இருக்கட்டும், ஆமென். அது அவ்வாறே தான் இருக்க வேண்டும். சரி. களிகூர்ந்து செல்லுங்கள், சுகமாகுங்கள், உங்கள் இரவு ஆகாரத்தை உண்ணுங்கள்… சரி. வாரும், ஐயா, உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இவர் தாமே சுகமாக்கப்படட்டும். ஆமென். 220. அது ஜனக்கூட்டத்தில் அநேகம் பேரை தொடுகின்றது, ஒரு நிமிடம். அந்த... எத்தனைப் பேர் இங்கே தளர்ச்சியுள்ள வயிற்றைக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அநேகம், என்னால் .... அதோ அங்கே பாருங்கள்? தளர்ச்சியுள்ள வயிற்று நிலையைக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். இங்கே தான் அதை விரட்டப் போகிறீர்கள். ஒரு நிமிடம் நில்லுங்கள். ஐயா, தரித்து நில்லுங்கள். என் சகோதரனே விசுவாசித்து செல்லுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் தாமே சுகமாவீர்களாக. இப்பொழுது வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறீர்களா, சகோதரியே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகமாவீர்களாக. தளர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே இருந்து வருகிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம் கோளாறு உள்ள ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். விசுவாசித்துச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருங்கள். அங்கே நில்லுங்கள். ஓ கர்த்தராகிய தேவனே, எங்கள் சகோதரனின் மீது இரக்கம் வைத்து அவரை சுகப்படுத்த வேண்டு மென்று உம்மிடம் ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். விசுவாசம் கொள்ளுங்கள். அருமை சகோதரியே இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இவள் தாமே சுகமாக்கப்படுவாளாக, தேவனுடைய மகிமைக்கென்று பிதாவே.  221. ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது. பில்லி, அவ்வளவுதானா? ஆம், இங்கே வாருங்கள் ஐயா. நாம் ஒருவருக் கொருவர் அந்நியர் தானே? தேவன் நம்மிருவரையும் அறிவார். அவர் அறிவார்? ஓ, அது எல்லாவிடங்களிலும் காணப்படுகின்றது. நினைவில் கொள்ளுங்கள், பிரசங்கிகளே, என் சகோதரரே, என் விலையேறப்பெற்ற கழுகு சகோதரர்களே, நான் இங்கேயிருந்து கடந்து சென்ற பிறகு அநேக வாரங்களுக்கு உங்கள் சபையார் சுகமாக்கப்பட்டதைக் குறித்து சாட்சி கொடுத்துக் கொண்டிருப் பார்கள். அவர்கள் சுகமாக்கப்பட்டு விட்டார்கள், ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. பாருங்கள், பாருங்கள்? அது எல்லா இடத்திலும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதமான விசுவாசத்தை ஏன் நாம் கொண்டிருக்கக் கூடாது நண்பர்களே? இது தான். தேவன் உங்களுக்கு உதவி செய்ய முடியுமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்குள்ள வியாதி என்னவென்று தேவன் எனக்கு கூறுவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு கடுமையான தலைவலிகள் இருக்கின்றன. உங்களுக்கு தலை சுற்றல் இருக்கின்றது. அது கழுத்தில் ஒரு சதை வளர்ச்சியினால் தான். சரியா. நீர் யாரென்பதை தேவன் அறிவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஒரு ஊழியக்காரர். உங்கள் பெயர் சங்கை ஜாக்கோல். அது முற்றிலும் சரியே. விசுவாசித்து செல்லுங்கள் ஐயா. 222. தலை சுற்றல் அல்லது தலைவலி யார் யாருக்கு உள்ளதோ அவர்களெல்லாரும் எழுந்து நில்லுங்கள். வியாதியாயிருக்கிற ஒவ்வொரு நபரும் எழுந்து நில்லுங்கள். ஓ, தேவனே, என்ன சம்பவிக்கும்..... என்ன நிகழ்ந்தேறும்? நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? இந்த காரியம் தான் பரிசுத்த ஆவியானவர் என்று நிச்சயத்திருக்கின்ற எத்தனை விசுவாசிகள் இங்கு உள்ளனர். உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அக்காரியங்களை என்னால் செய்ய முடியாது. நீங்கள் எல்லாரும் விசுவாசிகள் தானே? ஒருவர் மீது ஒருவர் உங்கள் கையை வைத்து, யார் மீது கையை வைத்துள்ளீர் களோ அந்த நபரிலிருந்து பிசாசை வெளியேறும் படிக்கு கூறுங்கள், என் ஜெபத்தைப் போலவே உங்கள் ஜெபமும். ஒருவர் மீது ஒருவர் உங்கள் கரங்களை போடுங்கள். அது சரி, அங்கிருக்கின்ற அந்த ஸ்திரீ, காசநோய் உங்களை விட்டு நீங்கிற்று. சகோதரனே தளர்ச்சி உங்களை விட்டு நீங்கினது. நீங்கள் உங்கள் கைகளை கீழே போட்டு துதிகளை சத்தமிடுங்கள்..?.. அங்கிருக்கினற அந்த சிறிய ஸ்திரீயோடு.... அது சென்று விட்டது. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். 223. இது தான் அது, நண்பர்களே, தேவனுக்கு ஸ்தோத்திரத்தை செலுத்துவோமாக. ஓ, கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர். பிசாசை, அவனுடைய எல்லா செய்கைகளையும் நான் கடிந்து கொள்கிறேன். ஒவ்வொரு தீய ஆவியையும் நான் கடிந்து கொள்கிறேன். சாத்தானே, உன் முகத்திரைகிழிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ கடிந்து கொள்ளப்படுகிறாய். ஜீவிக்கிற தேவனைக் கொண்டு நான் உனக்கு கட்டளையிடுகிறதாவது; இந்த ஜனக் கூட்டத்திலிருந்து வெளியே வா. இன்னும் இவர்கள் சந்தேகம் கொள்ளும்படிக்கு உன்னால் செய்யமுடியாது. பரிசுத்த ஆவியானவர் தாமே இவர்கள் முன்னால் தம்மை தத்ரூபமாக காண்பித்தார். இன்னும் இவர்கள் சந்தேகம் கொள்ளும்படிக்கு உன்னால் செய்ய முடியாது. ஒருவர் மீது ஒருவர் தங்கள் கரங்களை வைத்திருக்கிறார்கள். இயேசு, ''விசுவாசிகளை இந்த அடை யாளங்கள் பின்தொடரும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறினார். சாத்தானே, நீ தோற்றுப் போனாய். இயேசு அருகில் இருக்கின்றார், அவர் தாமே பரலோகத்தின் தேவன். வியாதியின் வல்லமை, பிசாசின் வல்லமை இந்த ஜனங்களின் மேல் உடைத்தெறியப்படுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.